/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய கணவர்
/
கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய கணவர்
ADDED : ஜூன் 20, 2025 11:19 PM
மைசூரு: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை, கணவரும், அவரின் கள்ளக்காதலியும் சேர்ந்து தாக்கிய சம்பவம், மைசூரில் நடந்துள்ளது.
மைசூரு நகரின் சிவநகரை சேர்ந்தவர் சிவலிங்க சுவாமி - மிலன் தம்பதி. சிவலிங்க சுவாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இதையறிந்த மிலன், கணவருடன் சண்டை போட்டு வந்துள்ளார். ஆயுத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் மிலன், நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பினார். வீட்டில் பவித்ராவுடன் கணவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கோபத்தில் இருவருடனும் சண்டை போட்டுள்ளார். இருவரும் சேர்ந்து மிலனை தாக்கி உள்ளனர். அப்போது சிவலிங்க சுவாமி, 'உன்னை கொலை செய்துவிடுவேன். உன்னை விவகாரத்து செய்து, பவித்ராவை திருமணம் செய்து கொள்வேன்' என்று மிரட்டி உள்ளார். கோபமடைந்த மிலன், போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.