தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விவாகரத்து கேட்ட மனைவியை வெட்டிய கணவர் தற்கொலை

 விவாகரத்து கேட்ட மனைவியை வெட்டிய கணவர் தற்கொலை

 விவாகரத்து கேட்ட மனைவியை வெட்டிய கணவர் தற்கொலை


ADDED : ஏப் 08, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: விவாகரத்து கேட்ட மனைவியை, அரிவாளால் வெட்டிய கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

துமகூரு மாவட்டம் கொரடகரே தாலுகா, கோட்டே கிராமத்தில் வசித்தவர் மா ருதி, 40. இவர் நாகமணி, 35, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கட்டட கட்டுமான கூலியாளாக மாருதி பணியாற்றினார். திருமணமான சில ஆண்டுகளில், நாகமணிக்கு அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை கிடைத்தது. மைசூரில் அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். அரசு பணி கிடைத்த பின், அவரது நடவடிக்கை மாறியது. வாழ்க்கை பாணியும் மாறியது. கட்டட கட்டுமான கூலியாளாக பணியாற்றிய மாருதியுடன் வாழ விரும்பாமல், விவாகரத்து பெற ஆலோசித்தார்.

நாகமணிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக, மாருதியும் சந்தேகித்தார். இதே விஷயமாக தம்பதிக்கிடையே அவ்வப்போது தகராறு நடந்தது. இது குறித்து, மைசூரு போலீஸ் நிலையத்தில் நாகமணி புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.

மைசூரில் வசிக்கும் நாகமணி, கணவருடன் இருந்த குழந்தைகளை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் கோட்டே கிராமத்துக்கு வந்திருந்தார். அப்போதும், விவாகரத்து தொடர்பாக தம்பதிக்கு இடையே சண்டை நடந்தது. கோபமடைந்த மாருதி, அரிவாளால் மனைவியை வெட்டி விட்டு தப்பியோடினார். காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இந்நிலையில் தொட்டனஹள்ளி கிராமத்தில், நேற்று மாருதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கொரட்டகரே போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us