/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவி வர மறுப்பு கணவர் தற்கொலை
/
மனைவி வர மறுப்பு கணவர் தற்கொலை
ADDED : நவ 16, 2025 11:48 PM
குடகு: மனைவி தன்னுடன் வாழ மறுத்து, தாய் வீட்டுக்கு சென்றதால், மனம் நொந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின் கிப்பெட்டா கிராமத்தில் வசித்தவர் கீர்த்தன், 36. இவரது மனைவி ஜோதி, 30. கீர்த்தன் திருட்டு வழக்கில் தொடர்பு கொண்டிருந்தார். இதனால் போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்திருந்தனர். சமீபத்தில் இவர் விடுதலை செய்யப்பட்டார்.
கணவர் சிறைக்கு சென்றதால், மனைவி ஜோதி தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன் தினம் மாலையில், மனைவியை அழைத்து வரும் நோக்கில், மாமியார் வீட்டுக்கு சென்றார்.
கீர்த்தன் சிறைக்கு சென்று வந்தவர் என்பதால், இவருடன் வாழ, மனைவிக்கு விருப்பம் இல்லை. கணவர் தன் வீட்டுக்கு வரும்படி மன்றாடியும், மனைவி சம்மதிக்கவில்லை.
இதனால் வருத்தம் அடைந்த கணவர், மடிகேரி அருகில் உள்ள சிங்கோனா வனப்பகுதிக்கு சென்று, மனைவிக்கு வீடியோ கால் செய்து, தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். கணவர் அவ்வப்போது தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதால், ஜோதி பொருட்படுத்தவில்லை. ஆனால் கீர்த்தன் அங்கிருந்த மரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை, இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மடிகேரி ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

