/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவி பிரிந்ததால் ஆற்றில் குதித்து கணவர் தற்கொலை
/
மனைவி பிரிந்ததால் ஆற்றில் குதித்து கணவர் தற்கொலை
ADDED : செப் 13, 2025 04:51 AM

பீதர்: குழந்தைகளுடன், தன் தாய் வீட்டுக்கு மனைவி சென்றதால், விரக்தி அடைந்த நபர், பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் உள்ள ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பீதர் மாவட்டம், பால்கி தாலுகாவில் வசித்தவர் பிரபாகர் சூர்யவம்சி, 38. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையால், இவரிடம் கோபித்துக் கொண்ட மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு, தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பல முறை சமாதானம் செய்தும் பயன் இல்லை. மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த பிரபாகர் சூர்யவம்சி, குடிப்பழக்கத்திற்கு ஆளானார். நேற்று முன் தினம் மாலையில், ஹலசிதுாகாவ் கிராமத்தின் அருகில் உள்ள பாலத்திற்கு சென்று, 30 அடி உயரமான பாலத்தில் இருந்து, மாஞ்ச்ரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அங்கு வந்த மெஹகர் போலீசார், தீயணைப்பு படையினர் ஆற்றில் அவரை தேடினர்.