தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தற்கொலை செய்த மனைவி உடலை பார்க்க சென்ற கணவர் விபத்தில் பலி

 தற்கொலை செய்த மனைவி உடலை பார்க்க சென்ற கணவர் விபத்தில் பலி

 தற்கொலை செய்த மனைவி உடலை பார்க்க சென்ற கணவர் விபத்தில் பலி


ADDED : ஏப் 07, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: தற்கொலை செய்து கொண்ட மனைவியின் உடலை காண, பைக்கில் சென்ற கணவர், சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

பெலகாவி மாவட்டம், பைலஹொங்களா தாலுகா, அரவள்ளி கிராமத்தில் வசித்தவர் கரெப்பா, 36. இவரது மனைவி மதுரா, 30. தம்பதிக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். மதுரா பல ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நாளுக்கு நாள் வலி அதிகரித்தது. இதனால், மனம் உடைந்த அவர், நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை பைலஹொங்களா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து, கணவர் கரெப்பாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் மனைவியின் உடலை காண, மருத்துவமனைக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அரவள்ளி கிராஸ் அருகில் வரும் போது, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மோதியது. பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார்.

பைலஹொங்களா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us