/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவிக்கு வளைகாப்பு கணவர் மாரடைப்பில் பலி
/
மனைவிக்கு வளைகாப்பு கணவர் மாரடைப்பில் பலி
ADDED : மே 23, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகாவின், விட்லா அருகில் உள்ள மித்தநட்டா கிராமத்தில் வசித்தவர் சதீஷ், 33. இவர் வாகன ஓட்டுநராக பணியாற்றினார். சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது.
அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். ஏழு மாதம் நிரம்பியதால், நேற்று அவருக்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர். காலையில் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
நிகழ்ச்சி துவங்கவிருந்த நிலையில், சதீஷ் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல், அவர் உயிரிழந்தார்.