/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏமாற்றி 3வது திருமணம் செய்தார் மனைவி மீது கணவர் 'திடுக்' புகார்
/
ஏமாற்றி 3வது திருமணம் செய்தார் மனைவி மீது கணவர் 'திடுக்' புகார்
ஏமாற்றி 3வது திருமணம் செய்தார் மனைவி மீது கணவர் 'திடுக்' புகார்
ஏமாற்றி 3வது திருமணம் செய்தார் மனைவி மீது கணவர் 'திடுக்' புகார்
ADDED : ஜன 12, 2026 06:47 AM

வில்சன் கார்டன்: ஆபாச படத்தில் வருவது போல உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாக, கணவர் மீது மனைவி புகார் அளித்த நிலையில், நான் உடை மாற்றுவதை புகைப்படம் எடுத்து மிரட்டுவதாக, மனைவி மீது கணவர் பதில் புகார் அளித்து உள்ளார்.
பெங்களூரு வில்சன் கார்டனில் வசிப்பவர் மேகாஸ்ரீ, 28. எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் மனிதவள பிரிவில் அதிகாரியாக பணியாற்றுகிறார். தன் அலுவலகத்தில் மனிதவள பிரிவில் மேலாளராக பணி செய்த மஞ்சுநாத், 36, என்பவரை காதலித்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்தார்.
கடந்த மாதம் 30ம் தேதி, மத்திய மண்டல மகளிர் போலீஸ் நிலையத்தில், மஞ்சுநாத் மீது மேகாஸ்ரீ அளித்த புகாரில், தன் கணவர் சைக்கோ போல நடந்து கொள்வதாகவும்; வீட்டில் நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும்; ஆபாச படத்தில் வருவது போல உடலுறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும்; மாதவிடாய் காலத்தில் கூட தன்னை துன்புறுத்துவதாகவும் கூறி இருந்தார்.
போலி சான்றிதழ் இந்நிலையில், மேகாஸ்ரீ மீது வில்சன் கார்டன் போலீஸ் நிலையத்தில் மஞ்சுநாத் நேற்று புகார் செய்தார். பின், அவர் கூறியதாவது:
மேகாஸ்ரீக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் முடிந்து உள்ளது. இதுபற்றி எனக்கு தெரியாது. என்னை ஏமாற்றி, மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவரது இரண்டாவது கணவர் வசதி படைத்தவர்.
அவரிடம் இருந்து பணம் வாங்கி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று செலவு செய்தார். பின், அவரை விட்டுவிட்டு என்னை மூன்றாவது திருமணம் செய்தார்.
இப்போது நான்காவது திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். இதனால் என் மீது பொய் புகார் அளித்து உள்ளார். எஸ்.எஸ்.எல்.சி., மட்டுமே படித்த அவர், போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்து உள்ளார்.
கோவிலில் வைத்து திருமணம் செய்தோம். திருமணத்தை பதிவு செய்ய சான்றிதழ் கேட்ட போது அவர் கொடுக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு 12 லட்சம் ரூபாய்க்கு வீட்டை குத்தகைக்கு எடுத்தேன்.
என்னிடம் இருந்து 30 லட்சம் ரூபாய்; 50 கிராம் நகைகள், விலை உயர்ந்த ஐபோன், ஐபேட்களை அவர் வாங்கினார். வீட்டில் நான் உடை மாற்றுவதை புகைப்படம் எடுத்து, அதை வெளியிடுவதாக மிரட்டுகிறார்.
வீட்டில் நிர்வாணமாக நடந்ததாக பொய் சொல்கிறார். ஒரு ரவுடி மூலம் என்னை மிரட்டுகிறார். எனக்கு நியாயம் வேண்டும். அவர் மீது போலீசில் புகார் செய்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மேகாஸ்ரீ, மஞ்சுநாத்துக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவர் தான் பொறுப்பு என்றும் கூறி உள்ளார்.

