/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
படுக்கை அறையில் ரகசிய கேமரா மனைவியை ஆபாச வீடியோ எடுத்த கணவர்
/
படுக்கை அறையில் ரகசிய கேமரா மனைவியை ஆபாச வீடியோ எடுத்த கணவர்
படுக்கை அறையில் ரகசிய கேமரா மனைவியை ஆபாச வீடியோ எடுத்த கணவர்
படுக்கை அறையில் ரகசிய கேமரா மனைவியை ஆபாச வீடியோ எடுத்த கணவர்
ADDED : அக் 04, 2025 04:25 AM

புட்டேனஹள்ளி: படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்து, மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து, துபாயில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பிய கணவர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
பெங்களூரு, புட்டேனஹள்ளியை சேர்ந்தவர் சையத் இனாமுல், 36. இவருக்கும், 34 வயது பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
தன் வீட்டில் உள்ள படுக்கை அறையில், மனைவிக்கு தெரியாமல், சையத் இனாமுல் ரகசிய கேமரா பொருத்தியுள்ளார்.
மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதை வீடியோ எடுத்துள்ளார். அத்துடன் மனைவி உடை மாற்றுவதையும், வீடியோ எடுத்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு, மனைவியிடம் அந்த வீடியோவை காட்டி, 'துபாயில் இருக்கும் என் நண்பர் ஒருவருடன், நீ உல்லாசமாக இருக்க வேண்டும்' என்று கூறி உள்ளார். இதற்கு மனைவி மறுத்துள்ளார். கோபம் அடைந்த அவர், மனைவியின் ஆபாச வீடியோக்களை, துபாயில் உள்ள தன் நண்பர்களுக்கு 'வாட்ஸாப்'பில் அனுப்பியுள்ளார்.
இதுபற்றி அறிந்த மனைவி, கணவரிடம் சண்டை போட்டுள்ளார். 'எனக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்துவிட்டது. அதை மறைத்து இரண்டாவதாக உன்னை திருமணம் செய்து கொண்டேன்.
'எனக்கு 19 பெண்களுடன் பழக்கம் உள்ளது. விருப்பம் இருந்தால், என்னிடம் குடும்பம் நடத்திக் கொள்; இல்லாவிட்டால் விவாகரத்து கொடுத்து விடுகிறேன்' என்று மிரட்டி உள்ளார்.
மனம் உடைந்த பெண், கணவரை பற்றி அவரது உறவினர் ஆசிம் பெய்க் என்பவரிடம் கூறி உள்ளார். உதவுவது போல நடித்து, பெண்ணிற்கு அவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். சையத் இனாமுலின் உறவினர்கள் சையது வாசிம், ஹுனா கவுசரும், அப்பெண்ணிற்கு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து கணவர் உட்பட 4 பேர் மீதும், பாதிக்கப்பட்ட பெண், புட்டேனஹள்ளி போலீசில் புகார் செய்தார். நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.