தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விவாகரத்துக்கு மறுத்த மனைவி கொலை செய்து கணவர் ஓட்டம்

விவாகரத்துக்கு மறுத்த மனைவி கொலை செய்து கணவர் ஓட்டம்

விவாகரத்துக்கு மறுத்த மனைவி கொலை செய்து கணவர் ஓட்டம்


ADDED : மே 28, 2025 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2025 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: விவாகரத்து தர மறுத்த காதல் மனைவியை, கத்தியால் குத்தி கொன்று, தலைமறைவான கணவரை போலீசார் தேடுகின்றனர்.

சிக்கமகளூரு தாலுகாவின், கைமரா கிராமத்தில் வசிப்பவர் அவினாஷ், 32. இவரும் இதே கிராமத்தை சேர்ந்த கீர்த்தி, 26, என்ற பெண்ணும் காதலித்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

சமீப நாட்களாக அவினாஷின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டது. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து, மனைவியுடன் சண்டை போட்டார். கடந்த வாரம் உறவினர் இல்லத்தில் நடந்த திருமணத்துக்கு சென்று வந்தனர். அதன்பின் இவர்களுக்குள் சண்டை அதிகரித்தது. விவாகரத்து கொடுக்கும்படி மனைவியை இம்சித்தார்.

கீர்த்தி, நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இதை அவினாஷ், தன் வீட்டினருக்கு தெரிவிக்காமல் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பலவந்தமாக அபார்ஷன் செய்ய வைத்தார். ஓய்வுக்காக மனைவி தன் தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.

நேற்று காலை, ஆற்றில் துணி துவைப்பதாக கூறி, கீர்த்தி வெளியே சென்றார். கைமரா செக்போஸ்ட் அருகில் செல்லும் போது, அவரை வழிமறித்த அவினாஷ் விவாகரத்து விஷயமாக தகராறு செய்தார். இருவருக்கும் காரசார வாக்குவாதம் நடந்தது.

அப்போது அவினாஷ், தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த கத்தியால், பத்து முறை மனைவியை சரமாரியாக குத்தினார். காயமடைந்த கீர்த்தி, தன் கணவரை கீழே தள்ளிவிட்டு, சாலைக்கு வந்து உதவி கேட்டு அலறினார். இவரை அப்பகுதியினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி கீர்த்தி உயிரிழந்தார்.

மனைவியை கொன்ற அவினாஷ், தலைமறைவாகி விட்டார். சிக்கமகளூரு ஊரக போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கொலையாளியை தேடுகின்றனர்.

தங்கள் மகளை கொலை செய்யும்படி, அவினாஷின் அக்கா தூண்டி விட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தும்படி, கீர்த்தியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us