sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சிலிண்டரால் அடித்து கணவர் கொலை மனைவி, கள்ளக்காதலர் கைது

/

 சிலிண்டரால் அடித்து கணவர் கொலை மனைவி, கள்ளக்காதலர் கைது

 சிலிண்டரால் அடித்து கணவர் கொலை மனைவி, கள்ளக்காதலர் கைது

 சிலிண்டரால் அடித்து கணவர் கொலை மனைவி, கள்ளக்காதலர் கைது


ADDED : ஏப் 11, 2026 04:22 AM

Google News

ADDED : ஏப் 11, 2026 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: காஸ் சிலிண்டரால் தாக்கி, இதயத்தின் மீது சிலிண்டரை போட்டு கணவரை கொலை செய்து விட்டு, இயல்பாக இறந்ததாக நாடகமாடிய மனைவியும், அவரது கள்ளக்காதலரும் கைது செய்யப்பட்டனர்.

பெலகாவியின் ஆனகோளா கிராமத்தில் பாபலேகல்லியில் வசித்தவர் அசோக் சுப்பன்னவரா, 40. இவர் ஆயுர்வேத தெரபிஸ்டாக பணியாற்றினார். இவர் அங்கோல் கிராமத்தில் 'அங்குஷா ஆயுர்வேதிக் கேர் கிளினிக்' என்ற பெயரில் கிளினிக் நடத்தினார். இவரது மனைவி லட்சுமி, 29. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மார்ச், 5ம் தேதியன்று, அசோக் சுப்பன்னவரா தன் கிளினிக்கின் படுக்கை அறையில் இறந்து கிடந்தார். கணவர் இயல்பாக இறந்ததாக லட்சுமி கூறினார். ஆனால், மகனின் இறப்பில், அசோக் சுப்பன்னவராவின் தாய் கமலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மகனின் பின்னந்தலையில் பலத்த காயங்கள் இருந்ததாக, டளகவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் பல கோணங்களில் விசாரித்தனர். விபத்தோ, இயல்பான இறப்போ அல்ல என்பதும், அசோக் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பதும் தெரியவந்தது. அசோக் சுப்பன்னவராவின் மனைவி லட்சுமியிடம் விசாரித்த போது, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவரது வீட்டருகில் மொபைல் போன் கடை நடத்தி வருபவர் கைலாஷ் பாலகிருஷ்ணா, 43. இவருக்கும், லட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது, கணவருக்கு தெரிந்து கண்டித்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இதன்படி, கைலாஷ் பாலகிருஷ்ணா சம்பவத்தன்று, கிளினிக் சென்று அசோக் சுப்பண்ணவராவின் தலையில், காஸ் சிலிண்டரால் தாக்கி, இதயத்தின் மீது சிலிண்டரை போட்டு கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பியது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி, கைலாஷ் கைது செய்யப்பட்டனர்.

பெலகாவி எஸ்.பி., பூஷண் போரசே கூறியதாவது:

அசோக்கின் மனைவி லட்சுமி, தன் கணவருக்கு நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் உள்ளது. கீழே விழுந்து மேஜையில் தலை மோதி இறந்திருக்கலாம் என்று கூறினார். அவரது பேச்சில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பின் விசாரணை நடத்தி, உண்மையை கண்டுபிடித்தோம். பிரேத பரிசோதனை அறிக்கையிலும், இது கொலை என்பது உறுதியானது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us