தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லாரி ஏறியதில் கணவர் பலி; மனைவி படுகாயம்

 லாரி ஏறியதில் கணவர் பலி; மனைவி படுகாயம்

 லாரி ஏறியதில் கணவர் பலி; மனைவி படுகாயம்


ADDED : ஜூன் 03, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனேக்கல்: சாலை ஓரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தும் போது, பின்னால் வந்த லாரி ஏறியதில், கணவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயத்துடன் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

பெங்களூரு ஆனேக்கல் தாலுகா ஹாரோஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் மஞ்சுநாத் ரெட்டி, 40. இவரது மனைவி பிரதிபா, 36. தங்கள் விவசாய நிலத்திற்கு பொருட்கள் வாங்கி, தம்பதி இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி, ஆனேக்கல் டவுனுக்கு வந்தனர்.

மிர்சா சாலையில் தனியார் மருந்தகம் அருகில் வரும் போது, பின்னால் வரும் லாரிக்கு வழி விட, மஞ்சுநாத், இரு சக்கர வாகனத்தை இடதுபுறமாக திருப்பினார். அப்போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு இரு சக்கர வாகனம் மீது இவர் ஓட்டி சென்ற வாகனம் மோதியது.

இதில் நிலை தடுமாறிய இருவரும், சாலையின் வலது புறம் விழுந்தனர். பின்னால் வந்த லாரி, மஞ்சுநாத் மீது ஏறியது. அவரது மனைவி பிரதிபாவின் கை, லாரியின் சக்கரத்தில் சிக்கியது. அங்கிருந்து உடனடியாக லாரி ஓட்டுநரை, லாரியை பின்னால் எடுக்க வைத்து, மஞ்சுநாத், பிரதிபாவை மீட்டனர்.

விபத்து குறித்து ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆம்புலன்சோ, அரை மணி நேரம் தாமதமாக வந்தது. மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மஞ்சுநாத் உயிரிழந்தார். பொம்மசந்திராவில் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், பிரதிபா சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரதிபாவின் மாமா கார்த்திக் ரெட்டி கூறியதாவது:

பிரதிபா, என் மாமாவின் மகள். அவரது கணவர் உயிரிழந்து விட்டார். இங்கு விபத்து நடப்பது இது முதல் முறையல்ல. இது இரண்டாவது விபத்தாகும். இது போன்று இங்கு சுற்றுப்புற பகுதிகளிலும் நடக்கிறது.

இவ்வழியாக டிப்பர் லாரிகள் செல்ல அனுமதிக்க கூடாது என்று போராட்டம் நடத்தியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சாலை குறுகலாக இருப்பதால், சாலை ஓரத்தில் நடப்பவர்களும் விபத்தில் சிக்குகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us