தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கள்ளக்காதலுக்காக கணவர் கொலை: மனைவி உட்பட மூவர் கைது

 கள்ளக்காதலுக்காக கணவர் கொலை: மனைவி உட்பட மூவர் கைது

 கள்ளக்காதலுக்காக கணவர் கொலை: மனைவி உட்பட மூவர் கைது


ADDED : நவ 29, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்து, உடலை எரித்த மனைவி உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.

யாத்கிரியை சேர்ந்தவர் பசவராஜ், 28. இவரது மனைவி சரணம்மா, 22. இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தம்பதி பெங்களூரின் திகளர பாளையாவில் வசித்தனர். வீரபத்ரா, 25, என்பவரின் தந்தையிடம் பசவராஜ் கட்டுமான கூலி வேலை செய்தார்.

அவ்வப்போது பசவராஜின் வீட்டுக்கு வந்தபோது, அவரது மனைவி சரணம்மாவுடன், வீரபத்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் விட்டு பிரிய முடியாத அளவுக்கு நெருக்கமாகினர்.

தாங்கள் சேர்ந்திருக்க பசவராஜ் தடையாக இருந்ததால், அவரை கொலை செய்யவும் திட்டமிட்டனர்.

இம்மாதம் 21ம் தேதி இரவு, பசவராஜ் மது அருந்திவிட்டு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது சரணம்மா, தன் கள்ளக்காதலன் வீரபத்ராவை போன் செய்து வரவழைத்தார். இருவரும் சேர்ந்து பசவராஜின் தலையில் கல்லைப் போட்டனர்.

அவர் இறக்காததால், துாக்கு போட்டுக் கொலை செய்தனர். அதன்பின் வீரபத்ராவின் கூட்டாளி அனில்குமார், 26, என்பவரை வரவழைத்தனர். நள்ளிரவு ஆள் நடமாட்டம் குறைந்த பின், பழைய துணிகளை போட்டு மூட்டை கட்டை, உடலை வெளியே கொண்டு வந்தனர்.

கங்கொண்டனஹள்ளியில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு உடலை போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்தனர். அடையாளம் தெரியாத ஆணின் உடல் பாதி எரிந்த நிலையில் இருப்பதாக, மாதநாயகனஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று உடலை மீட்டு, விசாரணை நடத்தினர்.

முதலில் அந்த ஆண், பசவராஜ் என்பதை கண்டுபிடித்தனர். அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்திய போது, கள்ளக்காதலுக்காக நடந்த கொலை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சரணம்மா, வீரபத்ரா, அனில் ஆகியோர், நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us