/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3வது மனைவி கன்னத்தை கத்தியால் கிழித்த கணவர்
/
3வது மனைவி கன்னத்தை கத்தியால் கிழித்த கணவர்
ADDED : ஜூலை 08, 2025 11:56 PM

சிக்கபல்லாபூர் : மூன்றாவது மனைவியின் நடத்தையை சந்தேகித்து, அவரது கன்னத்தை கத்தியால் கிழித்து, முகத்தை விகாரமாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
சிக்கபல்லாபூர் நகரில் வசிப்பவர் அஸ்வத் நாராயணா, 34. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர். ஆனால் யாரையும் நல்ல முறையில் வைத்து வாழவில்லை. பலவிதமாக துன்புறுத்தினார். இவரது தொந்தரவு தாங்க முடியாமல், முதல் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
இரண்டாவது மனைவியும், கணவரின் சகவாசமே தேவையில்லை என கூறி சென்றுவிட்டார். அதன்பின் பூஜா, 28, என்பவரை மூன்றாவதாக அஸ்வத் நாராயணா திருமணம் செய்து கொண்டார்.
தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையே மனைவி நடத்தையை சந்தேகித்து, தகராறு செய்து வந்தார். தினமும் குடிபோதையில் வந்து, மனைவியை தாக்கினார்.
நேற்று முன் தினமும், இதே காரணத்தால் மனைவியுடன் வாக்குவாதம் செய்தார். கத்தியால் மனைவியின் கழுத்தை அறுக்க முயற்சித்தார். அவர் அலறிக்கொண்டே வீடு முழுதும் ஓடினார்.
ஆனால் விரட்டி சென்று அவரது கன்னத்தை கிழித்தார். அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் வந்து பூஜாவை காப்பாற்றி, சிக்கபல்லாபூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, சிக்கபல்லாபூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் அஸ்வத் நாராயணாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணைநடத்துகின்றனர்.