தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முன்னாள் மனைவியின் காதலர் கணவரால் கொலை

 முன்னாள் மனைவியின் காதலர் கணவரால் கொலை

 முன்னாள் மனைவியின் காதலர் கணவரால் கொலை


ADDED : செப் 24, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: தன்னை விவாகரத்து செய்த மனைவியின் காதலரை, கொலை செய்த முன்னாள் கணவரை, போலீசார் கைது செய்தனர்.

துமகூரு நகரின், ஜனதா காலனியில் வசிப்பவர் கவுஸ், 45. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவருடன் பணியாற்றியவர் தஸ்தகீர், 26. அவ்வப்போது கவுசின் வீட்டுக்கு செல்லும் போது, இவரது, 36 வயது மனைவியுடன், தஸ்தகீருக்கு அறிமுகம் ஏற்பட்டது. கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக, மனைவி கூறினார்.

இவர்களின் அறிமுகம், கள்ளக்காதலாக மாறியது. ஒன்றரை ஆண்டுக்கு முன், கணவரிடம் விவாகரத்து பெற்று கொண்ட மனைவி தஸ்தகீருடன், தனியாக வசிக்க துவங்கினார்.

குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று, திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தனர். ஆனால் கவுஸ் விடாமல் முன்னாள் மனைவிக்கும், தஸ்தகீருக்கும் தொந்தரவு கொடுத்தார்.

கடந்த, 16ம் தேதியன்று, இவர்களின் வீட்டுக்கு வந்து கவுஸ் தகராறு செய்தார். கத்தியால் மனைவியை குத்த முற்பட்டார்.

அப்போது அவரை காப்பாற்ற, தஸ்தகீர் குறுக்கே வந்தார். அவரை பலமுறை கத்தியால் குத்திய கவுஸ், தப்பியோடிவிட்டார். பலத்த காயமடைந்த தஸ்தகீர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, சில நாட்களுக்கு முன், அவர் உயிரிழந்தார்.

விசாரணை நடத்திய துமகூரு போலீசார், தலைமறைவாக இருந்த கவுசை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us