தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ த.வெ.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

 த.வெ.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

 த.வெ.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு


ADDED : செப் 24, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துமகூரு: துருவகெரேயில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் த.வெ.க., - எம்.எல்.ஏ., சுனில் ஆனந்துக்கு, உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தின் மேட்டுப்பாளையம் த.வெ.க., - எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த். கன்னடரான இவரது மூதாதையர்கள், கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம், துருவகெரே தாலுகா டப்பேகட்டா பேரூராட்சி ஹூடிகேகட்டா கிராமத்தை சேர்ந்தவர்கள்.

நுாறு ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் அவர்கள் குடியேறினர். அவ்வப்போது தனது சொந்த கிராமத்தில் உள்ள உறவினர்களை சந்திக்க சுனில் ஆனந்த் குடும்பத்தினர் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.,வான பின், முதன் முறையாக தனது சொந்த கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். இவரின் வருகையை அடுத்து, கிராமத்தில் உள்ள கெம்பம்மா தேவி, மாரம்மா, சோமேஸ்வரா கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தங்கள் ஊரை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.,வானதால் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர், அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர்.

எம்.எல்.ஏ., சுனில் ஆனந்திற்கு, கிராமத்தினர் சால்வை, மாலை அணிவித்து கவுரவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us