ADDED : செப் 24, 2026 12:28 AM
ஆன்மிகம்
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பிரதோஷம்
புரட்டாசி மா த பிரதோஷத்தை ஒட்டி, பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. நந்திக்கு அபிஷேகம், பூஜை, மஹா மங்களாரத்தி, பிரசதாம் வழங்கல் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர்.
மஹா ருத்ராபிஷேகம், பால பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், சிறப்பு பிரதோஷ அபிஷேகம், தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 3:30 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.
நந்தி, சோமேஸ்வரருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களராத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.
ஏகாம்பரீஸ்வரர், நந்திக்கு அபிஷேகம், ஏகாம்பரீஸ்வரர் - காமாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.
நந்தி, விஸ்வநாதேஸ்வரர், விசாலாட்சிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், விஸ்வநாதேஸ்வரர் - விசாலாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
அபிஷேகம் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ பஞ்சலிங்க நாகேஸ்வரர் கோவில், பேகூர், பெங்களூரு.
அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி; பல்லக்கு உத்சவம் - 8:30 மணி. இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தம்பு செட்டி சாலை, காக்ஸ்டவுன்.
அபிஷேகம் - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: கவி கங்காதேஸ்வரா கோவில், கவிபுரம், பசவனகுடி.
அபிஷேகம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ காடு மல்லிகார்ஜுனா கோவில், மல்லேஸ்வரம்.
பொது
மருத்துவ முகாம்
ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை வளாகம், லலிதா - திரிபுரா சாலை, மைசூரு. தொடர்புக்கு 0821 - 254 8231, 95918 106 99.
விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
இசை
கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
சாண்டில்வுட், பாலிவுட் பாடல்கள் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ராகம் கபே, 59/1, 'ஜி' பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, பைட்ராயனபுரா.
பிக் பாலிவுட் நைட் - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் பிட்சர், 116/9, அம்பாலிபுரா, கைகொண்டரஹள்ளி.
அந்தாஸ் நைட் - இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பத்மாஸ் லாஞ்சு, 23, முதல் தளம், முதல் பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
காமெடி
வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.
