தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மனைவியை கொன்ற கணவர்

மனைவியை கொன்ற கணவர்

மனைவியை கொன்ற கணவர்


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 08:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: கர்நாடகாவின், தனித்தனி இடங்களில் நடந்த சம்பவங்களில், நடத்தையில் சந்தேகம் மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் மனைவி கொல்லப்பட்டார்.

சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுாரு தாலுகாவின், நக்கலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 40. இவரது மனைவி பத்மா, 35. தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சந்திரசேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது.

இதையறிந்த மனைவி, கணவரை கண்டித்து சண்டை போட்டார். தினமும் வாக்குவாதம் நடந்ததால், கோபமடைந்த சந்திரசேகர், மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இந்நிலையில் பத்மாவின் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, இவரது தாய் வீடான, சித்லகட்டா தாலுகாவின், தாத்தஹள்ளி கிராமத்துக்கு நேற்று முன்தினம் குழந்தைகளுடன் தம்பதி வந்திருந்தனர். மாலை முந்திரி தோட்டத்தை பார்த்து வரலாம் என, கூறி மனைவியை அழைத்து சென்றார்.

அங்கு சென்றதும் மனைவியை தாக்கினார். தப்பியோடிய அவரை விரட்டி விரட்டி, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

அதன்பின் தன் மாமியாருக்கும், உறவினர்களுக்கும் போன் செய்து, ‘பத்மாவை கொலை செய்துவிட்டேன். அவருக்கு இறுதி சடங்குகள் நடத்துங்கள்’ என, கூறினார். அங்கிருந்து கவுரிபிதனுாரு ஊரக போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடந்ததை கூறி சரண் அடைந்தார். போலீசாரும் அவரை கைது செய்தனர்.

 சித்ரதுர்கா மாவட்டம், ஹொசதுர்கா நகரின், ஏ.கே., காலனி அருகில் வசிப்பவர் மஞ்சுநாத், 35. இவரது மனைவி பூஜா, 30. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தம்பதிக்கு மகளும், மகனும் உள்ளனர்.

சமீப நாட்களாக மஞ்சுநாத்துக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதை காரணமாக வைத்து, மனைவியுடன் தகராறு செய்தார். நேற்று முன்தினம் இரவும் தம்பதிக்கிடையே, வாக்குவாதம் நடந்தது. அப்போது மஞ்சுநாத், மனைவி பூஜாவின் தலையில் கல்லை போட்டு, கொலை செய்தார்.

சம்பவத்துக்கு பின், அவர் ஹொசநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, சரண் அடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us