தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மனைவியை பார்த்து குரைத்த நாயை கொல்ல முயன்ற கணவர்

 மனைவியை பார்த்து குரைத்த நாயை கொல்ல முயன்ற கணவர்

 மனைவியை பார்த்து குரைத்த நாயை கொல்ல முயன்ற கணவர்


ADDED : ஏப் 13, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாதநாயகனஹள்ளி: பெங்களூரு மாதநாயகனஹள்ளியின், அவரேஹள்ளியில் வசிப்பவர் கோபி. இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அஞ்சினப்பா என்பவர், ஸ்கூபி என்ற பெயரில் நாய் வளர்க்கிறார். இது, அவ்வப்போது குரைத்து தொந்தரவு கொடுத்தது.

நேற்று முன்தினம் மாலையில், கோபியின் மனைவியை பார்த்து குரைத்தது. இதனால் கோபி, கோபம் அடைந்தார். இரவு அஞ்சினப்பா வீட்டுக்கு சென்று, கேட்டில் கட்டப்பட்டிருந்த நாயை, மரக்கட்டையால் கண் மூடித்தனமாக தாக்கி, கொலை செய்ய முயற்சித்தார். இதில் பலத்த காயமடைந்த ஸ்கூபி, மயங்கி விழுந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த அஞ்சினப்பா, நாய் அடிப்பட்டு கிடப்பதை பார்த்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிகிச்சைக்கு பின், நாய் உயிர் பிழைத்தது.

கோபி மீது மாதநாயகன ஹள்ளி போலீஸ் நிலையத்தில், அஞ்சினப்பா நேற்று புகார் செய்தார். கோபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us