தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விஷ ஊசி போட்டு மனைவியை கொல்ல முயற்சித்த கணவர், காதலியுடன் தற்கொலை

 விஷ ஊசி போட்டு மனைவியை கொல்ல முயற்சித்த கணவர், காதலியுடன் தற்கொலை

 விஷ ஊசி போட்டு மனைவியை கொல்ல முயற்சித்த கணவர், காதலியுடன் தற்கொலை


ADDED : செப் 30, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுப்பி: கர்ப்பிணி மனைவியை, விஷ ஊசி போட்டு கொலை செய்ய முயற்சித்த கணவர், தன் காதலியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவின் கோளிஹொளேவின் சார்தாலி கிராமத்தில் வசித்தவர் விட்டல் நாயக், 35. இவருக்கு திருமணமாகி, மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.

ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றும் விட்டல் நாயக்குக்கு பவ்யா, 33, என்ற காதலி இருக்கிறார். இவர், டெய்லராக பணியாற்றினார்.

தன் காதலியுடன் சேர்ந்து வாழ விரும்பிய விட்டல் நாயக், தன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். 20 நாட்களுக்கு முன், காதலி பவ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்து, அவரை நர்ஸ் என, மனைவிக்கு அறிமுகம் செய்தார்.

கர்ப்பிணி என்பதால் சிகிச்சை அளிக்க வந்ததாக நம்ப வைத்து, மனைவிக்கு விஷ ஊசி போட வைத்தார். அதன்பின் காதலியுடன் தப்பிவிட்டார்.

அக்கம், பக்கத்தினர் மயங்கி கிடந்த கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவருக்கு விஷஊசி போட்டு கொலை செய்ய முயற்சித்தது தொடர்பாக, செப்டம்பர் 11ம் தேதியன்று, பைந்துார் போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசாரும் விட்டல்நாயக்கையும், அவரது காதலியையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், கோளிஹொளேவின், சவுபர்ணிகா ஆற்றின் அருகில் ஆளில்லா இடத்தில் ஆண், பெண் உடல்கள் மரத்தில் துாக்கிட்ட நிலையில், அழுகிய நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன.

போலீசார் அங்கு வந்து உடல்களை மீட்டனர். விசாரணையில் இவர்கள் போலீசாரால் தேடப்பட்ட விட்டல் நாயக், பவ்யா என்பது தெரிந்தது.

விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்த மனைவி குணமடைந்தது தெரிந்ததால், போ லீசாரிடம் சிக்குவோம் என்ற பீதியில், காதலியுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us