தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாமூல் வசூலிப்பவர் அமைச்சர் குமாரசாமி மாநில மந்திரி பாலகிருஷ்ணா குற்றச்சாட்டு

 மாமூல் வசூலிப்பவர் அமைச்சர் குமாரசாமி மாநில மந்திரி பாலகிருஷ்ணா குற்றச்சாட்டு

 மாமூல் வசூலிப்பவர் அமைச்சர் குமாரசாமி மாநில மந்திரி பாலகிருஷ்ணா குற்றச்சாட்டு


ADDED : செப் 30, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''மத்திய அமைச்சர் குமாரசாமி மாமூல் வசூலிக்கும் கிராக்கி. இது தொடர்பான ஆதாரங்கள், என்னிடம் உள்ளன,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

'பிளாக்மெயில்' செய்வது, முதுகில் குத்துவது, பிளாக்மேஜிக் செய்வதில் மத்திய அமைச்சர் குமாரசாமி பிரசித்தி பெற்றவர். இதற்கு முன் தரம்சிங், எடியூரப்பாவின் முதுகில் குத்தினார். தினமும் யாரையாவது மிரட்டுவது, மக்களின் கவனத்தை திசை திருப்புவது அவரது முக்கியமான வேலையாகியுள்ளது .

வேலையில்லாத குயவன், எதையோ செய்தான் என்பதை போல, அவரது நிலையும் உள்ளது.

முதல்வர் சிவகுமாரின் செல்வாக்கு அதிகரிப்பதை அவரால் பொறுக்க முடியவில்லை. சிவகுமார் பிரபலம் அடைவதால், அவருக்கு உறக்கமே வருவதில்லை என, அவருக்கு நெருக்கமானவர்களே கூறுகின்றனர்.

முதலில் அவர் நன்றாக உறங்கி, தன் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளட்டும். வரும் நாட்களில் இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டால், அதற்கும் சிவகுமாரே காரணம் என, குற்றஞ்சாட்டினாலும் ஆச்சரியப்பட முடியாது.

குமாரசாமி, மாமூல் வசூலிக்கும் கிராக்கி. அவரது முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள், என்னிடம் உள்ளன. சரியான நேரத்தில் அவற்றை வெளியிடுவேன்.

முதலில் மாநில விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 50,000 ரூபாய் நிவாரணம் அவர் வழங்கட்டும். இல்லாவிட்டால் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர். சென்னம்மாவுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியவுடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவிடம் சரண் அடைந்த குமாரசாமி, கூட்டணி வைத்து கொண்டார்.

குமாரசாமி முதல்வராக இருந்த போது, அவரது சகோதரர் பாலகிருஷ்ணகவுடாவின் சொத்து, ஒரே ஆண்டில் 1,000 கோடி ரூபாயானது எப்படி. முதலில் இதுபற்றி விசாரணை நடத்தட்டும். மற்றவரின் சொத்து குறித்து விமர்சிக்கும் குமாரசாமி, தானும் கண்ணாடி வீட்டில் அமர்ந்திருப்பதை மறக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us