/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணம் தர மறுத்த கணவர் கொலை மனைவி, தாய்மாமா கைது
/
பணம் தர மறுத்த கணவர் கொலை மனைவி, தாய்மாமா கைது
ADDED : நவ 18, 2025 04:59 AM
மஞ்சுநாத் லே - அவுட்: கேட்ட பணத்தை கொடுக்க மறுத்த கணவரை, மாடிப்படிகளில் இருந்து தள்ளிக் கொலை செய்த மனைவி, அவரது தாய் மாமா கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, ஆந்திரஹள்ளி அருகில் உள்ள, மஞ்சுநாத் லே - அவுட்டில் வசித்தவர் வெங்கடேஷ், 43; ஆட்டோ ஓட்டுநர். 10 ஆண்டுகளுக்கு முன், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பார்வதி, 34, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
வீட்டை தன் பெயரில் எழுதி வைக்கும்படியும், இல்லாவிடில் ஆறு லட்ச ரூபாய் கொடுக்கும்படி பார்வதி கேட்டார். இறுதியில் 2.50 லட்சம் ரூபாய் கொடுக்க, வெங்கடேஷ் சம்மதித்தார்.
இதையும் பார்வதி ஏற்கவில்லை. நேற்று காலையி ல் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றி, கதவை தாழிட்டார்.
இதனால் கோபமடைந்த பார்வதி, தன் தாய்மாமா ரங்கசாமியை வரவழைத்தார். இருவரும் கதவை உடைத்து உள்ளே புகுந்து, வெங்கடேஷை தாக்கினர். வீட்டின் மாடிப்படிகளில் இருந்து, கீழே தள்ளினர். இதில் அவர் உயிரிழந்தார். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

