/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியர் திடீர் போராட்டம்
/
மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியர் திடீர் போராட்டம்
மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியர் திடீர் போராட்டம்
மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியர் திடீர் போராட்டம்
ADDED : நவ 18, 2025 04:59 AM

பெங்களூரு: மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் பயணியர் போராட்டம் நடத்தியதால், ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
பெங்களூரில் பச்சை, ஊதா ஆகிய மெட்ரோ ரயில் வழித்தடங்களில் அதிகாலை 5:00 மணி முதல் ரயில் சேவை துவங்கும். ஆனால், ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் மட்டும் காலை 6:00 மணிக்கு தான் ரயில் சேவை துவங்கும்.
'மஞ்சள் வழித்தடத்திலும் அதிகாலை 5:00 மணிக்கே ரயில் சேவை துவங்க வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு ஆர்.வி., சாலை மெட்ரோ நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த ரயிலை, அங்கிருந்த பயணியர் சிலர் மறித்து போராட்டம் நடத்தினர். இதனால், ரயில்களை இயக்க முடியாமல் போனது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மெட்ரோ நிலைய அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அப்போது, மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவை அதிகாலை 5:00 மணிக்கே துவங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இந்த போராட்டத்தால், காலை 6:00 மணிக்கு புறப்பட்ட வேண்டிய ரயில் காலை 6:35 மணிக்கு தான் புறப்பட்டது. இதனால், மற்ற ரயில் நிலையங்களில் பயணியர் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து, மெட்ரோ அதிகாரிகள், ஜெயநகர் போலீசில் புகார் செய்தனர்.

