UPDATED : நவ 24, 2026 12:00 AM
ADDED : நவ 23, 2026 07:56 PM
அ நிறம் | அளவு
சித்ரதுர்கா: சித்ரதுர்கா மாவட்டம், ஹொசதுர்கா தாலுகாவின் எம்.ஜி.திப்பா கிராமத்தில் வசித்தவர் ரங்கப்பா, 78. இவரது மனைவி ஜெயம்மா, 73. நேற்று முன் தினம் காலை, வீட்டில் உணவை முடித்த பின், காளைகளை மேய்ப்பதற்காக ரங்கப்பா நிலத்துக்கு சென்றார். மதியம் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அங்கேயே அவர் உயிரிழந்தார்.
இதை பார்த்த கிராமத்தினர், ரங்கப்பாவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். கணவர் உயிரற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயம்மா, மயங்கி விழுந்தார். அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியில் அவர் உயிரிழந்தார்.
கணவன், மனைவி இருவருக்கும் நேற்று ஒன்றாகவே குடும்பத்தினர் இறுதிச்சடங்குகள் செய்தனர்.
