தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கணவர் கண்டிப்பு மனைவி தற்கொலை 

 கணவர் கண்டிப்பு மனைவி தற்கொலை 

 கணவர் கண்டிப்பு மனைவி தற்கொலை 


ADDED : மார் 10, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: 'அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்' என்று கணவர் அறிவுரை கூறியதால், மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கபல்லாபூரின் சொக்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் கங்கராஜ், 30. இவரது மனைவி வரலட்சுமி, 25. இவரது மொபைல் போன் நம்பருக்கு நேற்று முன்தினம் மாலை அழைப்பு வந்தது. கங்கராஜ் எடுத்து பேசினார். எதிர்முனையில் பேசிய நபர் தனது பெயர் ஷ்ரவன் என்றும், வரலட்சுமியின் நண்பர் என்றும் கூறினார்.

காதலியுடன் சண்டை போட்டு விட்டதாகவும், இதுபற்றி வரலட்சுமியிடம் கூற வேண்டும் என்றும், ஷ்ரவன் கூறி உள்ளார். மொபைல் அழைப்பை துண்டித்த கங்கராஜ், மனைவியிடம் கேட்ட போது, தனது நண்பர் ஷ்ரவனுக்கும், அவர் காதலித்த பெண்ணுக்கும் பிரச்னை என்று வரலட்சுமி கூறினார்.

இதை கேட்டு கோபம் அடைந்த கங்கராஜ், அடுத்தவர் விஷயத்தில் எதற்காக தலையிடுகிறாய் என்று, மனை வியை திட்டியதுடன், இனி தலையிட வேண்டாம் என்று அறிவுரை கூறி உள்ளார். கணவர் திட்டியதால் மனம் உடைந்த, மனைவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடத்தை சந்தேகத்தில் வரலட்சுமியை கொலை செய்து, உடலை துாக்கில் தொங்க விட்டதாக, கங்கராஜ் மீது வரலட்சுமி பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us