/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு அனல் மின் நிலையங்கள் ஓய்வு
/
நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு அனல் மின் நிலையங்கள் ஓய்வு
நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு அனல் மின் நிலையங்கள் ஓய்வு
நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு அனல் மின் நிலையங்கள் ஓய்வு
ADDED : ஆக 27, 2025 10:50 PM
பெங்களூரு : இம்முறை போதுமான அளவு மழை பெய்ததால், நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே பல்லாரி அனல் மின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தில் இரண்டு மாதமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் துங்கபத்ரா உட்பட, அனைத்து நீர் மின் உற்பத்தி அணைகள் நிரம்பியுள்ளன.
இதன் பயனாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இங்கு நிரந்தரமாக மின் உற்பத்தி நடப்பதால், ராய்ச்சூர் அனல் மின் உற்பத்தி நிலையம், பல்லாரி அனல் மின் உற்பத்தி நிலையம், யரமரஸ் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான அழுத்தம் குறைந்தது.
இம்மூன்று நிலையங்களில், தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகம் இருக்கும் என்பதால், மின் தேவையும் அதிகம் இருந்தது. மாணவர் விடுதிகள், அரசு அலுவலகங்கள் உட்பட, அனைத்து இடங்களிலும் மின் விசிறி, ஏர் கூலர் பயன்பாடு அதிகம் இருந்தது.
ராய்ச்சூர், பல்லாரி, யரமரஸ் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான அழுத்தம் அதிகம் இருந்தது. அதன்பின் கனமழை பெய்ததால், நீர் மின் உற்பத்தி அதிகரித்ததால். அனல் மின் உற்பத்தி நிலையங்களில், தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சராவதி, நாகஜரி, வராஹி, லிங்கனமக்கி, கத்ரா, கேருசொப்பா உட்பட மற்ற நீர் மின் உற்பத்தி நிலையங்களில், நிரந்தரமாக மின் உற்பத்தி நடக்கிறது. அணைகளில் நீர் வரத்து குறைந்து, மின் உற்பத்தி குறைந்தால், அனல் மின் உற்பத்தி நிலையங்களில், மின் உற்பத்தி துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.