தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நானும் அமைச்சராக விரும்புகிறேன்: கூறுகிறார் தன்வீர் செய்ட் எம்.எல்.ஏ.,

 நானும் அமைச்சராக விரும்புகிறேன்: கூறுகிறார் தன்வீர் செய்ட் எம்.எல்.ஏ.,

 நானும் அமைச்சராக விரும்புகிறேன்: கூறுகிறார் தன்வீர் செய்ட் எம்.எல்.ஏ.,


ADDED : மே 30, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: சித்தராமையா முதல்வர் பதவியை, ராஜினாமா செய்துவிட்டார் என்பதற்காக, நாங்கள் வருத்தத்துடன் அமர்ந்திருக்க வேண்டுமா... சிவகுமார் தலைமையில் புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவையில், நானும் அமைச்சராக விரும்புகிறேன், என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து, மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

இதற்கு முன் காங்கிரஸ் அரசு இருந்த போது, எங்கள் சமுதாயத்தினருக்கு, குறைந்தபட்சம் மூன்று அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், 2023 முதல், 2024 வரை, இருவருக்கு மட்டுமே, அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், புதிய அமைச்சரவை அமைக்கப்படும். நானும் கூட அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறேன். புதிதாக அமையவிருக்கும் சிவகுமார் அமைச்சரவையில், எனக்கும் வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன்.

சித்தாரமையாவுக்கு எட்டு ஆண்டுகள் முதல்வராக இருக்க, காங்கிரஸ் வாய்ப்பு அளித்தது. கட்சியில் அவருக்கு கவுரவம், அந்தஸ்து இருக்கும். அரசு அமைந்த போதே, எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால், கிடைக்கவில்லை. இம்முறை மேலிடம் என்னை கவனிக்கும் என நம்புகிறேன்.

சித்தராமையா முதல்வர் பதவியை, ராஜினாமா செய்துவிட்டார் என்பதற்காக, நாங்கள் வருத்தத்துடன் அமர்ந்திருக்க வேண்டுமா. அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்கள், மற்றவருக்காக பதவியை தியாகம் செய்ய வேண்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us