/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நான் உண்மையான காங்கிரஸ்காரன் உள்துறை அமைச்சர் திட்டவட்டம்
/
நான் உண்மையான காங்கிரஸ்காரன் உள்துறை அமைச்சர் திட்டவட்டம்
நான் உண்மையான காங்கிரஸ்காரன் உள்துறை அமைச்சர் திட்டவட்டம்
நான் உண்மையான காங்கிரஸ்காரன் உள்துறை அமைச்சர் திட்டவட்டம்
ADDED : செப் 11, 2025 11:39 PM

பெங்களூரு:''நான் உண்மையான காங்கிரஸ்காரன்,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெளிவுபடுத்தினார்.
பெங்களூரில் ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பு சார்பில் ராணி அப்பக்கா ரத யாத்திரை நேற்று முன் தினம் நடத்தப்பட்டது. ராணி அப்பக்கா சிலைக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மலர் துாவினார். இந்த வீடியோ சமூக தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
நான் சென்று கொண்டிருந்த பாதையில், ஏ.பி.வி.பி., சார்பில் ராணி அப்பக்கா ரத சிலை ஊர்வலம் நடந்தது. அப்போது அவரது சிலைக்கு மாலை அணிவித்தேன். இந்நேரத்தில் பா.ஜ., - எம்.எல்.ஏ., சடாக் ஷரியும், நானும் ஒன்றாக இருந்தோம். நான் ஏ.பி.வி.பி., நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
என் சித்தாந்ததில் உறுதியாக இருக்கிறேன். நான் உண்மையான காங்கிரஸ்காரன். என் அரசியல் எதிரிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இவர்கள் கட்சிக்குள் அல்லது வெளியே இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.