கன்னடர் என சொல்ல வெட்கமாக உள்ளது: 'பிக்பாஸ்' பிரபலம் மைக்கேல் அஜய் விரக்தி
கன்னடர் என சொல்ல வெட்கமாக உள்ளது: 'பிக்பாஸ்' பிரபலம் மைக்கேல் அஜய் விரக்தி
ADDED : மே 17, 2026 11:29 PM

பெங்களூரு: 'கன்னடர்' என்று சொல்லி கொள்ள எனக்கு வெட்கமாக உள்ளது,' என்று, 'பிக்பாஸ்' பிரபலம் மைக்கேல் அஜய் விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
இன் ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோவில் பேசி இருப்பதாவது:
நான் பாதி இந்தியர்; பாதி நைஜீரியர். எனது தந்தை பெங்களூருகாரர் என்பதால், நான் கன்னடர் என்று பெருமையாக சொல்லி வந்தேன். ஆனால் இன்ஸ்டாகிராமில் நான் பதிவிடும் வீடியோக்களுக்கு வரும் மோசமான கருத்துகளை கன்னடர்கள் தா ன் பதிவிடுகின்றனர். எனது உடற்பயிற்சி வீடியோவுக்கு மோசமான கமென்ட் பதிவிடுகின்றனர். இதனை பார்த்து எனது பெற்றோர் வருத்தம் அடைந்து உள்ளனர்.
எனது காதலியுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறேன். அவரது முகத்தை காட்டுவது இல்லை. அவரையும் பற்றி ஆபாசமாக பேசினால் அதை தாங்க முடியாது. கன்னடர்கள் ஏன் என்னை பற்றி மோசமான கருத்து தெரிவிக்கின்றனர் என தெரியவில்லை. கன்னடர் என சொல்லவே எனக்கு வெட்கமாக உள்ளது.
நான் இனி யாரை பற்றியும் குறை சொல்ல போவது இல்லை. மோசமான கருத்துகளை பதிவிடுவோரை பற்றி எதுவும் சொல்ல முடியாது. நான் கவலைப்பட போவதும் இல்லை.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
கன்னட பிக்பாஸ் சீசன் 10 ல் போட்டியாளராக இருந்த மைக்கேல் அஜய், தனது கட்டுப்பாட்டான உடல் அமைப்புக்காக ரசிகர்கள் பாராட்டை பெற்றவர். பிக்பாஸ் முடிந்து அவர் வெளியே வந்த பின், காதலியுடன் இணைந்து எடுக்கப்பட்ட வீடியோவுக்கு ஆதரவாக, எதிர்ப்பாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
