ADDED : அக் 25, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான் அரசியல் சன்னியாசி அல்ல. எனக்கும் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்காக எனக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிடுவார்களா? இதை பற்றி மேலிடம், முடிவு செய்ய வேண்டும்.
மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவேன். நான் முதல்வராக வேண்டும் என்பேன். முதல்வராக்குவார்களா? முதல்வர் பதவி குறித்து, அவரவர் தங்களின் தனிப்பட்ட கருத்தை கூறுகின்றனர். அதற்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. முதல்வர் சித்தராமையா நல்லாட்சி நடத்துகிறார். சித்தராமையா, அரசியலின் இறுதிகட்டத்தில் இருக்கிறார் என, யதீந்திரா எந்த அர்த்தத்தில் கூறினார் என்பது தெரியவில்லை. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். அடுத்த முதல்வர் யார் என்பதை, எங்களின் தேசிய தலைவர் அறிவிப்பார். அதை நாங்கள் ஏற்போம். நான் யாருக்கு ஆதரவாகவும் இல்லை. காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கிறேன். பேளூரு கோபால கிருஷ்ணா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,

