தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தொழிலதிபர் சுதீப்பின் தற்கொலைக்கு நான் காரணமல்ல: சவுமியா விளக்கம்

 தொழிலதிபர் சுதீப்பின் தற்கொலைக்கு நான் காரணமல்ல: சவுமியா விளக்கம்

 தொழிலதிபர் சுதீப்பின் தற்கொலைக்கு நான் காரணமல்ல: சவுமியா விளக்கம்


ADDED : ஏப் 03, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுப்பி: ''தொழிலதிபர் சுதீப் தற்கொலை செய்து கொண்டதற்கு, நான் காரணம் கிடையாது,'' என, அவரது மனைவி சவுமியா கூறியுள்ளார்.

உடுப்பி மாவட்டம் நெல்யாடியை சேர்ந்த தொழிலதிபர் சுதீப், 30. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம், ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்தான சவுமியா என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்தது. கடந்த மாதம் சுதீப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரின்தற்கொலைக்கு அவரது மனைவி சவுமியாவே காரணம் என, சுதீபின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இவ்வழக்கு மாநிலத்தில் பெரிதாக பேசப்பட்டது. இதனிடையே, சவுமியாவால் தானும் பாதிக்கப்பட்டதாக, முல்கியை சேர்ந்த வேணு என்பவர் ஊடகங்களில் பேட்டி கொடுத்தார்.

இது குறித்து, சவுமியா அழுது கொண்டே நேற்று அளித்த பேட்டி:

சுதீபின் தற்கொலைக்கு நான் காரணம் கிடையாது. அவருக்கு நான் விஷம் கொடுத்ததாக கூறுவது உண்மையில்லை. சுதீப் தன் குடும்பத்தினரின் தொல்லையால் தான் விஷம் குடித்திருப்பார்.

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்த சுதீபின் குடும்பத்தினர் மற்றும் வேணுவின் மீது, கார்கலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளேன்.

சுதீப்பின் தாய் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். அதனால், என் மனம் புண்பட்டது. இதற்காக, நான் எந்த கலவரத்தையும் ஏற்படுத்தவில்லை. வேணும், நானும் ஒன்றாக பணிபுரிந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்ள முயன்றார்.

அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரிய வந்ததால், திருமணத்தை நிறுத்தினேன். எனக்கு எதிராக பேசியவர்கள் மீது புகார் அளித்து உள்ளேன். போலீசார் விசாரித்து உரிய நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us