ADDED : செப் 19, 2026 11:37 PM

பெங்களூரு: ''பா.ஜ., - ம.ஜ.த., ஹிட் லிஸ்டில் என் பெயர் முதலிடத்தில் இருக்கும்,'' என, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., - ம.ஜ.த.,வின் இலக்கு, வெறுப்பு பட்டியலில் நான் முதல் இடத்தில் இருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்.,சிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அவரது ஓட்டுநர், இடைத்தரகர் அனைவருக்கும், பா.ஜ.,வுடன் தொடர்பு உள்ளது. சிவசங்கரப்பா சாகுகரின் பெயர், அவர்களின் வாயில் இருந்து வரவே இல்லை. ஆனால், என் பெயர் மட்டும் நுாறு முறை, அவர்களின் வாயில் இருந்து வருகிறது. இதற்கு, ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம்.
கைது செய்யப்பட்ட கே.பி.எஸ்.சி., முக்கிய தலைவர்களுடன், அமைச்சரின் தனி உதவியாளர் மொபைல் போனில் பேசியதற்கான ஆதாரம் இருந்தால் அதை, எதிர்க்கட்சி தலைவர் அசோக் வெளியிடட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
