'மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு நீங்க எடுத்த முயற்சியை பாராட்டியே ஆகணும்'
'மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு நீங்க எடுத்த முயற்சியை பாராட்டியே ஆகணும்'
ADDED : மார் 21, 2026 05:46 AM

பெங்களூரு: கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கிய 86 வயது மூதாட்டி, இங்கு வந்தது மனசுக் கு ரொம்ப சந்தோஷமா இருக்கு; நீங்க எடுத்த முயற்சியை பாராட்டியே ஆகணும்னு, நெகிழ்ச்சியு டன் கூறினார்.
பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலை தினமலர் அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, இந்திராநகரில் வசிக்கும் பட்டு ராஜகோபாலன், 86, தனது பேத்தியான எம்.எஸ்.சி., பட்டதாரி அக் ஷதா, 25 வுடன், நேற்று வருகை தந்தார். ஒரு பை நிறைய 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எடுத்து வந்து, நுாலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கி மகிழ்ச்சி அடைந்தார்.
பின், அவர் கூறியதாவது:
நான் தினமலரின் ரெகுலர் வாசகி. ஒரு நாள் கூட நாளிதழ் படிக்காமல் இருந்ததே இல்லை. ஆன்மிகமலர், வாரமலர், சிறுவர்மலர் புத்தகங்கள் சூப்பர்.
குறுக்கெழுத்து புதிர் அருமையான படைப்பு. புத்தகங்களை நான் விரும்பி படிப்பேன். படித்து முடித்து வீட்டில் இருந்த புத்தகங்களை, இங்கு கொண்டு வந்து உள்ளேன். இன்னும் நிறைய புத்தகங்கள் எடுத்து வருகிறேன்.
இங்கு வந்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு; நிறைந்த மனசுடன் இங்கிருந்து செல்கிறேன். பெங்களூரில் தமிழ் புத்தகங்களை படிக்குற நுாலகத்தை ஆரம்பிச்சு இருக்கீங்க. உண்மையிலேயே நீங்க எடுத்த முயற்சியை பாராட்டியே ஆகணும். எல்லோருக்கும் நுாலகம் பயனுள்ளதாக அமைய எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாட்டியுடன் வந்திருந்த பேத்தி, புத்தகங்களை ஆர்வமாக படித்து பார்த்தார். நுாலகத்தை நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர். எங்களை அலுவலகத்தில் நல்ல முறையில் உபசரித்தனர். பாட்டியுடன் வந்தது எனக்கு மகிழ்ச்சி என அக் ஷதா கூறினார்.
ஏழு நாட்களும் பூத்து குலுங்கும்
வாரத்தின் ஏழு நாட்களும் காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் இயங்கும். விடுமுறை கிடையாது. நுாலகம் தொடர்பாக 93615 00327, 89715 09091 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
