எனக்கு பால் விற்கும் வேலை கொடுத்துள்ளனர் முன்னாள் எம்.பி., சுரேஷ் பேட்டி
எனக்கு பால் விற்கும் வேலை கொடுத்துள்ளனர் முன்னாள் எம்.பி., சுரேஷ் பேட்டி
ADDED : மார் 05, 2026 06:02 AM

ராம்நகர்: ''அடுத்த முறை நான் தேர்தலில் போட்டியிடுவேனா, இல்லையா என்பது தெரியாது. எனக்கு பால் விற்கும் வேலை கொடுத்துள்ளனர். அதை செய்து வருகிறேன்,'' என, முன்னாள் எம்.பி., சுரேஷ் கூறினார்.
ராம்நகர், மாகடி தாலு காவின், சக்ரபாவி கிராமத்தில், ஒய்.ஜி.குட்டா ஏற்ற நீர்ப்பாசன திட்டத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், முன்னாள் எம்.பி., சுரேஷ் பங்கேற்றார்.
பின், அவர் அளித்த பேட்டி:
எங்கள் அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. 115 கி.மீ., தொலைவில் இருந்து, காவிரி தண்ணீர் கொண்டு வந்து, மாகடியின், 18 ஏரிகளை நிரப்பும், ஒய்.ஜி.குட்டா ஏற்ற நீர்ப்பாசன திட்டத்தை ஊகிக்கவும் முடியாது. ஆனால், எங்கள் அரசு அந்த திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம், சொன்னபடி நடந்துள்ளது.
பெங்களூரு தெற்கு மாவட்டத்தின், குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண, துணை முதல்வர் சிவகுமார் இரவு பகலாக உழைக்கிறார்.
சத்தேகாலா நீர்ப்பாசன திட்டமும் கூட, சில மாதங்களில் முடிவடையும். நாங்கள் பொய் சொல்லிக் கொண்டு, கண்ணீர் விட்டபடி மக்களிடம் ஓட்டு கேட்க செல்லமாட்டோம்.
அடுத்த முறை லோக்சபா தே ர்தலில், நான் போட்டியிடுவேனா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. என்னை பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக நியமித்துள்ளனர். பால் விற்கும் வேலையை எனக்கு கொடுத்துள்ளனர். அதை சரியாக செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறி னார்.
