/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஆர்டர்' செய்தது கை கடிகாரம் பார்சலில் வந்தது உருளைக்கிழங்கு
/
'ஆர்டர்' செய்தது கை கடிகாரம் பார்சலில் வந்தது உருளைக்கிழங்கு
'ஆர்டர்' செய்தது கை கடிகாரம் பார்சலில் வந்தது உருளைக்கிழங்கு
'ஆர்டர்' செய்தது கை கடிகாரம் பார்சலில் வந்தது உருளைக்கிழங்கு
ADDED : ஜன 23, 2026 05:58 AM
ராய்ச்சூர்: ஆன்லைனில் கை கடிகாரம் ஆர்டர் செய்த நபருக்கு, பார்சலில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு வந்தது.
ஆந்திராவை சேர்ந்தவர் தக்குபாடி பாபு, 48. இவர் பணி நிமித்தமாக, ராய்ச்சூருக்கு வந்துள்ளார். யரமரஸ் அருகில் தங்கியுள்ளார். இங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ஜனவரி 13ம் தேதி, சமூக வலைதளம் ஒன்றில் விளம்பரம் வெளியாகியிருந்தது. அதில் 5,000 ரூபாய் விலையுள்ள கைகடிகாரம், 1,200 ரூபாய்க்கு விற்கப்படும் என, கூறப்பட்டிருந்தது.
இதை நம்பிய அவர், குறைந்த விலைக்கு கைகடிகாரம் கிடைக்கிறது என்ற ஆசையில், ஆன்லைனில் 1,200 ரூபாய் செலுத்தி ஆர்டர் செய்தார். ஆர்டர் செய்த ஐந்தாறு நாட்களுக்கு பின், கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அதை பிரித்து காட்டும்படி, கூரியர் நிறுவன ஊழியரிடம் தக்குபாடி பாபு கூறினார். அதன்படி ஊழியரும் பார்சலை பிரித்து காட்டிய போது, அதில் கை கடிகாரத்துக்கு பதிலாக, பழைய துணியில் சுற்றப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்குகள் இருந்தன.
கூரியர் நிறுவனமே மோசடி செய்துள்ளதாக, தக்குபாடி பாபு குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை கூரியர் ஊழியர் மறுத்துள்ளார். பார்சல் வருவதற்கு முன்பே, மோசடி நடந்திருப்பதாக விவரித்துள்ளார். பார்சலில் என்ன இருக்கிறது என்பது, தங்களுக்கு தெரியாது எனவும், கூறியுள்ளார். இது குறித்து, சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில், தக்குபாடி பாடி புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.

