sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மனைவியை கொன்று துாக்கிலிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் கைது

/

 மனைவியை கொன்று துாக்கிலிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் கைது

 மனைவியை கொன்று துாக்கிலிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் கைது

 மனைவியை கொன்று துாக்கிலிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் கைது


ADDED : ஜன 23, 2026 05:57 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ஆர்.நகர்: குடும்ப தகராறில் மனைவியை மூச்சு திணறடித்து கொன்று, உடலை துாக்கிலிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய, கணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

துமகூரை சேர்ந்தவர் விருபாக் ஷா கவுடா, 29. இவரது மனைவி ஆஷா, 27. இருவரும் இரண்டு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். தம்பதிக்கு குழந்தை இல்லை.

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் சன்னசந்திராவில் வசித்தனர். பானிபூரி விற்பனை செய்யும் கடையை விருபாக் ஷா நடத்தினார்.

தம்பதி இடையில் சில மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனாலும் ஒரே வீட்டில் வசித்தனர். கடந்த 10ம் தேதி இரவு, வீட்டில் உள்ள படுக்கை அறையில் ஆஷா துாக்கில் தொங்கினார். மனைவி தற்கொலை செய்ததாக கணவர் நாடகமாடினார்.

ஆனாலும் ஆஷாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் அருண், ஆர்.ஆர்.நகர் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடந்தது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த பிரேத பரிசோதனை அறிக்கையில், மூச்சு திணறடித்து கொன்ற பின், ஆஷாவை துாக்கில் தொங்கவிட்டது பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் விருபாக் ஷாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். தன் கடையில் வேலை செய்யும், விஜயபுராவின் முத்தேபிஹாலை சேர்ந்த புந்தலிக் ஜனப்பா, 23 என்பவருடன் சேர்ந்து, மனைவியை தலையணையால் மூச்சு திணறடித்து கொன்று விட்டு, போலீசில் இருந்து தப்பிக்க, உடலை துாக்கில் தொங்க விட்டு தற்கொலை என்று நாடகம் ஆடியதை ஒப்பு கொண்டார்.

அவர் கைது செய்யப்பட்டார். புந்தலிக் ஜனப்பாவும் கைதானார். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us