எனக்கு அமைச்சர் பதவி வேண்டும் காங்., - எம்.எல்.சி., உமாஸ்ரீ பிடிவாதம்
எனக்கு அமைச்சர் பதவி வேண்டும் காங்., - எம்.எல்.சி., உமாஸ்ரீ பிடிவாதம்
ADDED : ஆக 05, 2026 01:40 AM

பெங்களூரு: ''எனக்கு மேல்சபை துணைத்தலைவர் வழங்கப்பட்டாலும், கட்சி எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் என்று நம்புகிறேன்,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., உமாஸ்ரீ தெரிவித்தார்.
கர்நாடக மேல்சபை துணைத்தலைவராக காங்கிரஸ் எம்.எல்.சி., உமாஸ்ரீயை கட்சி மேலிடம் அறிவித்திருந்த நிலையில், பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, 20ல், 19 பேருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு இடத்தை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளனர். எனக்கு மேல்சபை துணைத்தலைவர் பதவி வழங்கி உள்ளனர். ஆனால், எனக்கு அமைச்சர் பதவி மீது விருப்பம் உள்ளது. கட்சி உரிய முடிவெடுத்து, எனக்கு அமைச்சர் பதவி வழங்கும் என்று நம்புகிறேன்.
கடைசி நேரத்தில் கட்சி மேலிடம் இறுதி முடிவெடுத்து உள்ளது. பெண்கள் அமைச்சராகவில்லை என்பதில் நிச்சயமாக எனக்கு வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
