தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ராஜினாமாவா நோ ப்ராப்ளம்!'

 'ராஜினாமாவா நோ ப்ராப்ளம்!'

 'ராஜினாமாவா நோ ப்ராப்ளம்!'


ADDED : ஆக 05, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 01:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் நேற்று முன்தினம் நடந்தது. புதிதாக, 19 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அமைச்சரவையில் 33 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், ஒரு இடம் மட்டுமே பாக்கியுள்ளது. அந்த இடத்தை பெண் எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.,க்களில் யாராவது ஒருவருக்கு வழங்க உள்ளனர்.

ஆனாலும் அந்த ஒரு இடத்திற்காக எம்.எல்.ஏ.,க்கள் போட்டி போடுகின்றனர். ஆதரவாளர்களை போராட்டம் நடத்தும்படி எம்.எல்.ஏ.,க்கள் துாண்டி விடுகின்றனர்.

தினேஷ் குண்டுராவ் பெங்களூரின் கோவிந்த்ராஜ்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரியா கிருஷ்ணா, அவரது தந்தையும், விஜயநகர் எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணப்பா ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க கோரி, குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் முன் ஆதரவாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரியா கிருஷ்ணாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கோஷம் எழுப்பினர்.

இதுபோல முன்னாள் அமைச்சரும், காந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான தினேஷ் குண்டுராவுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்படாததை கண்டித்து, அவரது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டயர்கள் எரிப்பு ஆனேக்கல் எம்.எல்.ஏ., சிவண்ணாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், சந்தாபுராவில் அவரது ஆதரவாளர்கள் சாலையில் டயர்களை கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். மொலகால்மூரு எம்.எல்.ஏ., கோபாலகிருஷ்ணாவின் ஆதரவாளர்களும் டயர்களை எரித்தனர்.

இது தவிர, பல இடங்களில் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாளர்கள், தங்கள் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி கை தப்பியதால் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

விஜயபுராவின் இண்டி தொகுதி எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல், நேற்று முன்தினம் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அவரிடம், காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது. எக்காரணம் கொண்டும் ராஜினாமாவை திரும்ப பெற மாட்டேன் என்று கூறுகிறார். இருந்தாலும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது.

பொறுமை அவசியம் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்வதாக மிரட்டுவது குறித்து, பெங்களூரில் முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:

என்ன சொல்ல வேண்டுமோ அதை நேற்று இரவே தெளிவாக சொல்லி விட்டேன். வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். பதவி கிடைக்காததால் ராஜினாமா செய்வதாக கூறுவது அரசியலில் சகஜமாக நடப்பது. ராஜினாமா செய்ய நினைப்பவர்களை தடுக்கவும் முடியாது. உங்களுக்கு அரசியல் எதிர்காலம் வேண்டும் என்றால் இருங்கள். தரம்சிங், சித்தராமையா முதல்வராக இருந்த போது, எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதற்காக நான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தேனா?

துணை முதல்வர் பரமேஸ்வருக்கு, நிறைய முறை பதவி கிடைக்காமல் போய் உள்ளது. அவர் ராஜினாமா செய்தாரா... அரசியலில் பொறுமை அவசியம். வீரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்த போது, தரம்சிங், பங்காரப்பாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. பின், நாட்களில் அவர்கள் இருவரும் முதல்வர் ஆகவில்லையா? கட்சி முக்கியம் என்று அனைவரும் நினைக்க வேண்டும்.

அமைச்சர் பதவி கிடைக்காதவர்களுக்கு வாரிய தலைவர் பதவி கொடுக்கிறோம். அதுவும் வேண்டாம், ராஜினாமா செய்வேன் என்று கூறினால், ராஜினாமா கடிதத்தை கொடுத்த ஒரு நிமிடத்திற்குள் ஏற்று கொள்வேன்.

வாரிய தலைவர் பதவியை கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வழங்கி விட்டு, மீதமுள்ள பதவிகளை எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்குவோம். சித்தராமையாவை பதவியில் இருந்து இறக்கியதால், கட்சியின் எதிர்காலம் பாதிக்கும் என்று ராஜண்ணா கூறியது பற்றி, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் பதில் அளிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us