/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மக்களுக்கு சேவை செய்ய அமைச்சராக ஆசை: பாலகிருஷ்ணா
/
மக்களுக்கு சேவை செய்ய அமைச்சராக ஆசை: பாலகிருஷ்ணா
ADDED : மே 27, 2025 11:40 PM

ராம்நகர்: மாகடியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா நேற்று அளித்த பேட்டி:
ராம்நகர் பாமுல் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஆறு இயக்குனர்கள் கிடைத்துள்ளனர். பாமுல் இயக்குநராக தேர்வாகி உள்ள துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ், எதிர்காலத்தில் கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவராக வர வேண்டும் என்பது எங்கள் ஆசை. அவர் தலைவரானால் விவசாயிகள் அதிகம் பயன்பெறுவர்.
எனது தம்பி அசோக்கும், பாமுல் இயக்குநராக தேர்வாகி உள்ளார். எங்கள் குடும்பம் அனைத்து அதிகாரத்திற்கும் ஆசைப்படுவதாக எதிரிகள் விமர்சிக்கின்றனர்.
விவசாயிகள் கேட்டு கொண்டதால், அசோக் தேர்தலில் போட்டியிட்டார். எதிர்காலத்தில் அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டார். ராம்நகர், பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாறி இருப்பதால், வளர்ச்சி பணிகள் அதிகம் நடக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
துணை முதல்வர் சிவகுமார், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்கரெட்டி ஆகியோர், இங்கு நிறைய வளர்ச்சி பணி செய்வர் என்று நம்பிக்கை உள்ளது. நான் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமென்றால் ஜுனியராக இருக்கலாம். ஆனால் எம்.எல்.ஏ., பதவியில் சீனியர்.
ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசில் இருந்திருந்தால் இரண்டு முறை அமைச்சராகி இருப்பேன். மாநில மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறேன். அமைச்சரவையில் மாற்றம் நடந்தால், எனக்கு பதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கூறினார்.