/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யாரையும் 3 நாட்கள் சந்திக்க மாட்டேன்! 'என்னை தேடி வராதீர்' என சிவகுமார் கட்டளை
/
யாரையும் 3 நாட்கள் சந்திக்க மாட்டேன்! 'என்னை தேடி வராதீர்' என சிவகுமார் கட்டளை
யாரையும் 3 நாட்கள் சந்திக்க மாட்டேன்! 'என்னை தேடி வராதீர்' என சிவகுமார் கட்டளை
யாரையும் 3 நாட்கள் சந்திக்க மாட்டேன்! 'என்னை தேடி வராதீர்' என சிவகுமார் கட்டளை
ADDED : ஜூலை 22, 2025 04:38 AM

பெங்களூரு: “மூன்று நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன். தொண்டர்கள், தலைவர்களை சந்திக்க இயலாது. எனவே யாரும் என்னை தேடி வர வேண்டாம்,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
சமீப நாட்களாக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் எலியும், பூனையும் போன்று முறைத்துக் கொள்கின்றனர். முதல்வர் பதவி விஷயத்தில், இருவருக்கும் மறைமுக யுத்தம் நடக்கிறது.
இலை மறை காயாக இருந்த இவர்களின் மனக்கசப்பு, சில நாட்களாக பகிரங்கமாகவே வெளிப்படுகிறது.
மைசூரில் இம்மாதம் 19ம் தேதி, நடந்த சாதனை மாநாட்டில், முதல்வர் சித்தராமையா, பேச ஆரம்பித்தபோது, பெங்களூரில் அவசர வேலை இருப்பதாகக் கூறி, துணை முதல்வர் சிவகுமார் மேடையில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டார்.
அப்போது, வரவேற்றுப் பேசும் போது சிவகுமார் பெயரை முதல்வர் குறிப்பிடவில்லை. அதுபற்றி சுட்டிக் காட்டியபோது, கோபமுற்ற முதல்வர், 'மேடையில் இல்லாதவர்களை பெயரை குறிப்பிட மாட்டேன்' என்றார்.
இது போல பல விஷயங்களால் சிவகுமார் மனம் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களில் பல முறை டில்லி சென்று வந்த சிவகுமார், மீண்டும் செல்ல தயாராகிறார்.
கட்சி, அரசு சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, டில்லி செல்வதாக கூறிக்கொண்டாலும், சித்தராமையா செயல்பாடு பற்றி, புகார் அளிக்கவே அவர் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல்வரின் ஆதரவாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரின் சதாசிவநகரில் தன் இல்லத்தில் சிவகுமார் அளித்த பேட்டி:
சில காரணங்களால், நாளை (இன்று) முதல் மூன்று நாட்கள், நான் ஊரில் இருக்க மாட்டேன். எனவே, பொதுமக்கள், கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என யாரும், என்னை சந்திக்க வர வேண்டாம். யாரும் தவறாக கருத வேண்டாம்.
வரும் 25ம் தேதி நானும், முதல்வரும் டில்லிக்கு செல்கிறோம். எம்.எல்.சி.,க்கள் நியமனம், கார்ப்பரேஷன், வாரியங்கள் நியமனம் உட்பட பல விஷயங்கள் குறித்து தலைவர்களுடன் பேச உள்ளோம்.
தர்மஸ்தலா வழக்கு குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கவனிக்கிறார். இந்த வழக்கில் உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும். இதற்காக உயர் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளார். உண்மை வெளிச்சத்துக்கு வரும். ஊடகத்தினரான உங்களையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஜனநாயக நடைமுறையில், எங்களை விட உங்களுக்கு பொறுப்பு அதிகம். உங்கள் ஆலோசனைகள் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.