/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐ.சி.எஸ்.சி., 10 ம் வகுப்பு தேர்வு ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி சாதனை
/
ஐ.சி.எஸ்.சி., 10 ம் வகுப்பு தேர்வு ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி சாதனை
ஐ.சி.எஸ்.சி., 10 ம் வகுப்பு தேர்வு ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி சாதனை
ஐ.சி.எஸ்.சி., 10 ம் வகுப்பு தேர்வு ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி சாதனை
ADDED : மே 01, 2025 05:29 AM

பெங்களூரு: ஐ.சி.எஸ்.சி., 10 ம் வகுப்பு தேர்வில், பெங்களூரின் ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளி சாதனை படைத்து உள்ளது.
ஐ.சி.எஸ்.சி., 10ம் வகுப்பு தேர்வு, கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி துவங்கி மார்ச் 27ம் தேதி நிறைவு பெற்றது.
இந்த தேர்வை கர்நாடகாவில் இருந்து 29,745 மாணவர்கள் எழுதி இருந்தனர். தேர்வு முடிவு நேற்று வெளியானது. அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று உள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 99.70 சதவீதம்.
பெங்களூரின் விஜயநகர் ஹம்பிநகரில் உள்ள, ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் இருந்து ஐ.சி.எஸ்.சி., தேர்வு எழுதிய 139 மாணவர்களும் வெற்றி பெற்று அசத்தி உள்ளனர்.
இந்த பள்ளியின் மாணவி டி.சின்மயி, எஸ். பூர்ணிமா ஆகியோர் 96.40 சதவீதம்; பிரதிஷா டி பார்மர் 96 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். 90 சதவீதத்திற்கு மேல் 14 மாணவர்களும்; 85 சதவீதத்திற்கு மேல் 15 பேரும்; முதல் வகுப்பில் 21 பேரும்; இரண்டாம் வகுப்பில் 40 பேரும் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளியின் முதல்வர் பி.லோகேஷ், இயக்குநர் பி.சந்திரமோகன் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.