/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
1991ல் ம.ஜ.த., வேட்பாளரான எனக்கு ஓட்டு திருட்டால்... தோல்வி!: அன்றைய காங்., அரசு மீது சித்தராமையா 'திடுக்' புகார்
/
1991ல் ம.ஜ.த., வேட்பாளரான எனக்கு ஓட்டு திருட்டால்... தோல்வி!: அன்றைய காங்., அரசு மீது சித்தராமையா 'திடுக்' புகார்
1991ல் ம.ஜ.த., வேட்பாளரான எனக்கு ஓட்டு திருட்டால்... தோல்வி!: அன்றைய காங்., அரசு மீது சித்தராமையா 'திடுக்' புகார்
1991ல் ம.ஜ.த., வேட்பாளரான எனக்கு ஓட்டு திருட்டால்... தோல்வி!: அன்றைய காங்., அரசு மீது சித்தராமையா 'திடுக்' புகார்
ADDED : ஆக 30, 2025 03:29 AM

லோக்சபா தேர்தல் முடிந்து, ஒன்றரை ஆண்டு நிறைவடைந்த நிலையில், பா.ஜ., மீது, காங்கிரஸ் ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், டில்லியில் ஊடகத்தினருடன் சந்திப்பு நடத்தினார். 'லோக்சபா தேர்தலில் முறைகேடு செய்து, பா.ஜ., வெற்றி பெற்றது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தது. குறிப்பாக கர்நாடகாவில் ஓட்டுத் திருட்டால், எங்களுக்கு தொகுதிகள் குறைந்தன' என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தினார்.
இம்மாதம் 8ம் தேதியன்று, பெங்களூரின் சுதந்திர பூங்காவில் ராகுல் தலைமையில் போராட்டமும் நடந்தது. இந்த விவகாரத்தை வைத்து, பா.ஜ., மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை நெருக்கடியில் சிக்க வைப்பது, காங்கிரசின் திட்டம்.
இந்நிலையில், ஓட்டுத் திருட்டு குறித்து, முதல்வர் சித்தராமையா வெளியிட்ட குற்றச்சாட்டு, காங்கிரசுக்கே 'பூமராங்'காக திரும்பியுள்ளது. பெங்களூரு விதான்சவுதாவில், வக்கீல்கள் சங்கம் சார்பில் மூத்த வக்கீல் ரவிவர்மகுமாரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. முதல்வர் சித்தராமையா பங்கேற்றார்.
அதில், அவர் பேசியதாவது:
கடந்த 1991 லோக்சபா தேர்தலில், கொப்பால் தொகுதியில் ம.ஜ.த., சார்பில் போட்டியிட்டேன். இந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்தேன். மோசடி செய்து என்னை தோற்கடித்தனர். இதற்கு ஓட்டுத் திருட்டே என் தோல்விக்கு காரணம்.
மோசடியால் என்னை தோற்கடித்தவர்களுக்கு எதிராக, சட்டப்போராட்டம் நடத்த, ரவிவர்மகுமார் எனக்கு உதவியாக இருந்தார். இதற்காக அவர் கட்டணம் ஏதும் பெறவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த 1991ல் லோக்சபா தேர்தல் நடந்தபோது, கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருந்தது. பங்காரப்பா முதல்வராக இருந்தார். கொப்பாலில் ஜனதா தள வேட்பாளராக சித்தராமையா போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் பசவராஜ் பாட்டீல் அன்வரி களமிறங்கினார். இவரிடம் சித்தராமையா தோற்றார்.
அந்த விவகாரத்தை தற்போது சித்தராமையா கிளப்பி இருப்பது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிரான அஸ்திரத்தை, முதல்வரே பா.ஜ.,விடம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தன் 'எக்ஸ்' பக்கத்தில் மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் வெளியிட்ட பதிவு:
கடந்த 1991ல் சித்தராமையா, கொப்பால் லோக்சபா தொகுதியில், சித்தராமையா ஜனதா தளம் வேட்பாளராக போட்டியிட்டார். இவரை தோற்கடித்தது யார், காங்கிரஸ் வேட்பாளர் தான். ஓட்டுத் திருட்டு என்ற கற்பனை நாடகத்தை பற்றிய உண்மையை கூறிய, முன்னாள் அமைச்சர் ராஜண்ணாவை, அவமதிப்பாக அமைச்சரவையில் இருந்து நீக்கிய ராகுல், இப்போது காங்கிரசின் மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சித்தராமையாவை, முதல்வர் பதவியில் இருந்தும், காங்கிரசில் இருந்தும் நீக்குவாரா? அந்த தைரியம் ராகுலுக்கு உள்ளதா?
காங்கிரசின் ஒழுங்கு நடவடிக்கை, அஸ்திரம், செல்வாக்கு என, எதுவாக இருந்தாலும், தலித் தலைவர்கள் மீது மட்டுமே பாயுமா? 2018ல் பாதாமியில் சித்தராமையா ஓட்டுகளை விலைக்கு வாங்கி, வெற்றி பெற்றார் என்பதை, முன்னாள் மத்திய அமைச்சர் இப்ராகிம் ஏற்கனவே, வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
பஞ்சாயத்து முதல், பார்லிமென்ட் வரை, காங்கிரசின் ஆதிக்கம் ஓங்கியிருந்த காலத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இருக்கவில்லை.
ஓட்டுச்சாவடியில் ஒருவரோ, இருவரோ அமர்ந்திருப்பர். காங்கிரஸ் 60 ஆண்டுகளாக தேர்தலில் எப்படி வெற்றி பெற்றது என்பதை, பி. சிதம்பரம் விலாவாரியாக விவரித்துள்ளார்.
நம் நாட்டில் ஓட்டுத் திருட்டு, தேர்தல் முறைகேட்டின் பிதாமகர் என, யாராவது இருந்தால், அது காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பம். ஓட்டுத் திருட்டு குறித்து, ராகுல் பேசுவது, பூதத்தின் வாயால் பகவத்கீதை கேட்பது போன்றுள்ளது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த 1991ல் கொப்பால் லோக்சபா தொகுதி தேர்தலில், காங்கிரசின் தேர்தல் முறைகேட்டுக்கு பலியானதாக, சித்தராமையாவே ஒப்புக்கொண்டார். மோசடி செய்து தன்னை தோற்கடித்ததாக தெளிவாக கூறியுள்ளார். ஓட்டுத் திருட்டுக்கு எதிராக போராடிய நபர், இன்று காங்கிரசின் முதல்வராக இருக்கிறார். அமித் மால்வியா, பா.ஜ., - ஐ.டி., பிரிவு தலைவர்

