ADDED : மார் 24, 2026 06:26 AM

பெங்களூரு: 'ஒரு வாக்காளரின் பெயர் தவறுதலாக இரண்டு வார்டுகளில் இடம் பெற்றிருந்தால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்' என ஜி.பி.ஏ., தெரிவித்து உள்ளது.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜி.பி.ஏ., தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், ஆட்சேபனை தெரிவிக்க வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலை ஜி.பி.ஏ., இணையதளத்தில் வாக்காளர்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
தங்கள் பெயர் இரண்டு வார்டுகளில் இடம்பெற்றிருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பெயரே இல்லாத வாக்காளர்களும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும். நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
