/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'போக்குவரத்து நெரிசல் அதிகரித்தால் நகரம் வளர்ச்சி அடைகிறது என பொருள்'
/
'போக்குவரத்து நெரிசல் அதிகரித்தால் நகரம் வளர்ச்சி அடைகிறது என பொருள்'
'போக்குவரத்து நெரிசல் அதிகரித்தால் நகரம் வளர்ச்சி அடைகிறது என பொருள்'
'போக்குவரத்து நெரிசல் அதிகரித்தால் நகரம் வளர்ச்சி அடைகிறது என பொருள்'
ADDED : ஜன 24, 2026 05:20 AM

பெங்களூரு: 'ஒரு நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது என்றால், அந்த நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றே அர்த்தம்' என, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறினார். அவர் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதற்கு, மக்கள் தொகை பெருக்கமும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புமே காரணமாகும். பெங்களூரு வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் இருப்பது இயற்கையானது.
இருப்பினும், போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக அதிநவீன தொழில்நுட்பத்தை, போக்குவரத்து போலீசார் பயன்படுத்துகின்றனர்.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த, 'டாம்டாம்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் உடைய, 2வது நகரமாக பெங்களூரு குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது என்றால், அந்த நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றே அர்த்தம்.
பெங்களூரில் வரும் கால கட்டத்தில், பொது போக்குவரத்து அமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பிக்கை இருக்கிறது.
மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அவர்களை ஊக்குவிக்கும் வேலையை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

