தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு தர ஆண்கள் எதிர்ப்பு

 பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு தர ஆண்கள் எதிர்ப்பு

 பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு தர ஆண்கள் எதிர்ப்பு


ADDED : ஜன 24, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாதவிடாய் விடுப்பு அளித்ததற்கு ஆண் ஊழியர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை மறு பரிசீலனை செய்யும்படி அரசை வலியுறுத்தியுள்ளனர்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், பல விதமான உடல் உபாதைகள் ஏற்படும். மனஅழுத்தம் வரும். பணியில் ஆர்வம் காட்ட முடியாது.

இதை மனதில் கொண்டு, அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாதவிடாயின் போது, ஊதியத்துடன் ஒரு நாள் விடுப்பு வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தியது. இந்த திட்டத்துக்கு ஆண் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெண் ஊழியர்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிப்பதால், ஆண் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இடையே மனஸ்தாபம் ஏற்படும் அபாயம் உள்ளது.

பெண்களே அதிக எண்ணிக்கையில் பணியாற்றும், கல்வித்துறை, சுகாதாரத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அன்றாட பணிகள், பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கொடுப்பதால் பாதிக்கும். பணிகள் முடங்குவதால், ஆண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, பெண் ஊழியர்களுக்கும் பணிச்சுமை ஏற்படும்.

பெண் ஊழியர்கள் விடுப்பில் இருந்தால், அலுவலகங்களில் அவர்களின் பணிகளை ஆண் ஊழியர்கள் செய்ய வேண்டியுள்ளது. நான்காவது சனிக்கிழமை விடுமுறை வழங்க, ஆய்வு நடத்தியதை போன்று, மகளிர் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் ஆய்வு செய்திருக்க வேண்டும். திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, ஆண் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us