/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்'
/
'டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்'
'டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்'
'டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்'
ADDED : டிச 18, 2025 07:10 AM

பெலகாவி: ''டிஜிட்டல் முறை பயிர் கணக்கெடுப்பில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், விவசாயிகள் தெரிவிக்கலாம். அதற்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்படும்,'' என்று, விவசாய அமைச்சர் செலுவராயசாமி கூறினார்.
சட்டசபையில் தரிகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் எழுப்பிய கேள்விக்கு, விவசாய அமைச்சர் செலுவராயசாமி அளித்த பதில்:
மத்திய அரசு கூறியபடி டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் விவசாயிகள் தெரிவிக்கலாம். அதற்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்படும்.
செயலி மூலம் தங்கள் பயிரிடும் பயிர் பற்றிய தகவலை வழங்க, விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4.40 கோடி பயிர்கள் கணக்கெடுக்கப்படுகின்றன. இதில் இரண்டு லட்சம் ஆட்சேபனைகள் வருகின்றன.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மீண்டும் கணக்கெடுப்பு செய்து உள்ளோம். அடர்ந்த காடுகள், சரணாலய பகுதியில் பயிர் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இல்லை.
மலைநாடு மாவட்டங்களில் சில பகுதிகளில், நெட்ஒர்க் பி ரச்னையால் செயலிகள் சரியாக வேலை செய்வது இல்லை. எனவே எழுத்துமூலமாக கணக்கெடுப்பு நடத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

