தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வனத்தில் சட்டவிரோத தேவாலயம் மதமாற்றம் நடப்பதாக குற்றச்சாட்டு

 வனத்தில் சட்டவிரோத தேவாலயம் மதமாற்றம் நடப்பதாக குற்றச்சாட்டு

 வனத்தில் சட்டவிரோத தேவாலயம் மதமாற்றம் நடப்பதாக குற்றச்சாட்டு


ADDED : மே 17, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 11:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குடகு: வனத்துக்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தேவாலயத்தை திறந்து வைக்க, தமிழகத்தில் இருந்து வந்த 40க்கும் மேற்பட்டோரிடம், போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

குடகு மாவட்டம், குஷால்நகர் தாலுகாவின், நாகூரு ஷிரங்காலா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹேரூரு கிராமத்தின் வனத்தில் மலைவாழ் மக்கள், சட்டவிரோதமாக தேவாலயம் கட்டியுள்ளனர். நேற்று முன்தினம் தேவாலயம் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து, 40க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர்.

வனத்தில் மக்கள் நடமாட்டம் இருப்பதை கண்ட, ஹேரூரு கிராமத்தினர் அங்கு சென்று பார்த்த போது, தேவாலயம் திறப்பு விழா நடப்பது தெரிந்தது. நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த குஷால்நகர் போலீசார் விசாரித்த போது கிராம பஞ்சாயத்திடம் அனுமதி பெறாமல், தேவாலயம் கட்டியது தெரிந்தது.

அப்போது மலைவாழ் மக்களுக்கும், கிராமத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'எங்கள் விருப்பப்படி தேவாலயம் கட்டி, பிரார்த்தனை செய்கிறோம். உங்களுக்கு என்ன வந்தது' என கேட்டு தகராறு செய்தனர். அதன்பின் போலீசார், தமிழகத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோரை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து, பா.ஜ., பிரமுகர் சந்திரசேகர் கூறியதாவது:

ஹேரூரு மலைவாழ் மக்கள், வனத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். மதமாற்றம் செய்து கொண்டவர்கள், சமூக நலத்துறைக்கு சொந்தமான இடத்தில், சட்டவிரோதமாக தேவாலயம் கட்டி, பிரார்த்தனைக்கு வசதி செய்துள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து, மக்கள் வந்துள்ளனர். சட்டவிரோத மதமாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us