/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்ட விரோதமாக தங்கியிருப்போர் நாடு கடத்தப்படுவர்: பரமேஸ்வர்
/
சட்ட விரோதமாக தங்கியிருப்போர் நாடு கடத்தப்படுவர்: பரமேஸ்வர்
சட்ட விரோதமாக தங்கியிருப்போர் நாடு கடத்தப்படுவர்: பரமேஸ்வர்
சட்ட விரோதமாக தங்கியிருப்போர் நாடு கடத்தப்படுவர்: பரமேஸ்வர்
ADDED : ஜூலை 07, 2025 11:08 PM

சதாசிவ நகர்: ''கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை திருப்பி அனுப்புவோம்,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. குஜராத்தை போன்று, அவர்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்புவோம்.
கட்டுமான பணிகளில் ஈடுபடுவோரிடம் விசாரணை நடத்தி, அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பது உறுதியானால், அவர்களை அவர்களின் நாடுகளுக்கு அனுப்புவோம். இவ்விஷயத்தை காங்கிரஸ் மென்மையாக கையாளுகிறது என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. வங்கதேசத்தினரை அழைத்து வந்து, ஓட்டு போட வைக்கும் சூழ்நிலையை நாங்கள் இன்னும் எட்டவில்லை.
கடந்த ஏப்ரலில் குஜராத் போலீசார், அவர்கள் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரை அடையாளம் கண்டு, ஆயிரத்துக்கும் அதிகமானோரை கைது செய்து, நாடு கடத்தப்பட்டனர்.
அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். போலி ஆவணங்கள் உருவாக்கி, வங்கதேசத்தினருக்கு சட்டவிரோதமாக உதவி செய்யும் வலைதளங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
துணை முதல்வர் சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று ரம்பாபுரி மடத்தின் வீர சோமேஸ்வர சுவாமிகள் கூறியதில் என்ன தவறு?
இவ்வாறு அவர் கூறினார்.