தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சட்டவிரோதமாக இயங்கிய சொகுசு விடுதிகளுக்கு பூட்டு

 சட்டவிரோதமாக இயங்கிய சொகுசு விடுதிகளுக்கு பூட்டு

 சட்டவிரோதமாக இயங்கிய சொகுசு விடுதிகளுக்கு பூட்டு


ADDED : மார் 10, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தரகன்னடா: பிரசித்தி பெற்ற கோகர்ணாவில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சொகுசு விடுதிகளுக்கு சீல் வைத்து, தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரகன்னடா மாவட்டம், கோகர்ணா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர். சொகுசு விடுதிகளில் தங்குகின்றனர்.

பல இடங்களில் முறைப்படி அனுமதி பெறாமல், சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அவ்வப்போது இத்தகைய சொகுசு விடுதிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கோகர்ணாவின் துப்பனசஷி கிராமத்தில், சட்டவிரோதமாக சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து குமட்டா தாலுகா தாசில்தார் ஸ்ரீகிருஷ்ணா, சில நாட்களுக்கு முன், கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்த போது, 44 சொகுசு விடுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை இடிக்க தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். அதேநேரத்தில், 16 சொகுசு விடுதிகளின் உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றுள்ளனர்.. ஏழு சொகுசு விடுதிகளின் உரிமையாளர்கள், தாமாகவே முன் வந்து சொகுசு விடுதிகளை அகற்றினர்.

21 விடுதிகளுக்கு தாலுகா நிர்வாகம் சீல் வைத்துள்ளது. விதிமுறைப்படி அவற்றை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us