/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையா மீதான வழக்கில் அக்., 8ல் முக்கிய தீர்ப்பு
/
சித்தராமையா மீதான வழக்கில் அக்., 8ல் முக்கிய தீர்ப்பு
சித்தராமையா மீதான வழக்கில் அக்., 8ல் முக்கிய தீர்ப்பு
சித்தராமையா மீதான வழக்கில் அக்., 8ல் முக்கிய தீர்ப்பு
ADDED : அக் 01, 2025 12:02 AM
பெங்களூரு : சித்தராமையா மீதான 'முடா' வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை தள்ளுபடி செய்ய கோரிய மனு மீது வரும் 8ம் தேதி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்திற்கு கொடுத்த 3.16 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக, மைசூரு விஜயநகரில் 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனைகளை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனைவிக்கு வாங்கிக் கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மைசூரின் சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா அளித்த புகார் தொடர்பாக, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செ ய்ய, மைசூரு லோக் ஆயுக்தாவுக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவானது.
விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா போலீசார், முதல்வர், அவரது மனைவி உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள் என்று, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை ரத்து செய்ய கோரியும், வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்ற கோரியும், சிநேகமயி கிருஷ்ணா மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் விசாரித்தார். மனுக்கள் மீதான விசாரணை நேற்றுடன் முடிந்த நிலையில், வரும் 8ம் தேதி தீர்ப்பு கூறுவதாக நீதிபதி அறிவித்தார். இதனால் 8ம் தேதி சித்தராமையாவுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.