/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
6 ஆண்டில் 3,033 பாலியல் வழக்கு பதிவு; தண்டனை கிடைத்தது 24ல் மட்டுமே
/
6 ஆண்டில் 3,033 பாலியல் வழக்கு பதிவு; தண்டனை கிடைத்தது 24ல் மட்டுமே
6 ஆண்டில் 3,033 பாலியல் வழக்கு பதிவு; தண்டனை கிடைத்தது 24ல் மட்டுமே
6 ஆண்டில் 3,033 பாலியல் வழக்கு பதிவு; தண்டனை கிடைத்தது 24ல் மட்டுமே
ADDED : ஏப் 16, 2025 11:17 PM
பெங்களூரு : கடந்த ஆறு ஆண்டுகளில் 3,033 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில் 24 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஹூப்பள்ளியில் 5 வயது சிறுமி பீஹார் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அந்நபரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இது மாநில அளவில் பேசும் பொருளாக மாறியது.இந்த என்கவுன்டருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கையும், அவற்றில் தண்டனை வழங்கப்பட்ட விபரங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன் விபரம் வருமாறு:
ஆண்டு ... பதிவான பலாத்கார வழக்குகள்... தண்டனை வழங்கப்பட்ட விபரம்
2020 479 8
2021 556 7
2022 537 9
2023 601 0
2024 736 0
2025 124 0
(கடந்த மாதம் வரை)
இதன்படி, மாநிலம் முழுதும் கடந்த ஆறு ஆண்டுகளில் 3,033 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், தற்போது வரை வெறும் 24 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதை வைத்து பார்த்தால், பலாத்கார வழக்குகளில் வழங்கப்படும் தண்டனை விகிதம் மிகவும் குறைவாக உள்ளதை எடுத்து காட்டுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பாலியல் சீண்டல் வழக்குகள் விபரம்:
ஆண்டு ... பதிவான வழக்குகள்
2020 4547
2021 4917
2022 5858
2023 6492
2024 6326
2025 799
(தற்போது வரை)
இதன் மூலம் பாலியல் சீண்டல் வழக்குகளின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தெரிகிறது.